For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கே விபத்துக்குக் காரணம்- ரயில்வே

Google Oneindia Tamil News

டெல்லி: மசாக் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் தண்டவாளத்தை மூடும் அளவுக்கு தண்ணீர் வந்ததே ரயில் தடம்புரண்ட விபத்துக்குக் காரணம் என்று ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தா அருகே மசாக் ஆற்றின் மீது இரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்தபோது அவை தடம் புரண்டன. அதில் இரு ரயில்களின் 15 பெட்டிகள் ஆற்றில் கவிழ்ந்தன. விபத்தில் சிக்கிய பெட்டிகளிலிருந்து இதுவரை 300 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள்ளனர். மேலும் பலர் பெட்டிகளில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. பலர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் ரயில் விபத்துக்கு திடீர் வெள்ளமே காரணம் என்று ரயில்வே பாதுகாப்பு வாரியத் தலைவர் ஏ.கே.மிட்டல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் மசாக் ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக தண்டவாளமே தெரியாத அளவுக்கு தண்ணீர் ஓடியுள்ளது. டிராக் இருந்த பகுதியில் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளம் பாதிக்கப்பட்டுள்ளது.

அருகில் உள்ள ஏதேனும் அணையிலிருந்து அதிகஅளவில் நீர் வெளியேறியதால் இந்த திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.

மும்பையிலிருந்து வாரணாசி செல்லும் காமயானி எக்ஸ்பிரஸ் மற்றும் மும்பை - ஜபல்பூர் இடையிலான ஜனதா எக்ஸ்பிரஸ் ஆகியவை விபத்துக்குள்ளான ரயில்களாகும்.

English summary
Railways today said the sudden flow of water on the tracks caused the derailment of the two trains while they were crossing the swollen Machak river near Harda in Madhya Pradesh. "According to reports, there was a possible burst in a nearby dam which caused sudden flow of water on the tracks and that resulted in the derailment," Railway Board Chairman A K Mittal told PTI.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X