For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2000 ரூபாய் அச்சடிப்பதை குறைத்துவிட்டோம்.. 500 ரூபாய் அச்சடிப்பதில் மும்முரம்: சக்திகாந்த தாஸ்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: சில்லரை தட்டுப்பாட்டை போக்க 500 ரூபாய் தாள்களை அதிகம் அச்சிடுவதாக டெல்லியில் மத்திய அரசின், பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் இன்று தெரிவித்தார்.

டெல்லியில் அவர் அளித்த பேட்டியில் கூறியது:

ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவு, சந்தை சரிவுகள் விரைவில் சீராகும். இது உலகளாவிய சரிவுதானே தவிர, ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு தொடர்பானது கிடையாது.

Focus on printing more Rs 500 notes:EAS Shaktikanta Das

இந்தியாவில் தற்போது வினியோகிக்கப்படும், புதிய ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் 100 சதவீதம் பாதுகாப்பானவை. 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் முதல் முறையாக முற்றிலும் உள் நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டவை. அவற்றின் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம். இவற்றை கள்ள நோட்டாக அச்சிட வாய்ப்பு மிக, மிக குறைவு.

புதிய ரூபாய் நோட்டு சப்ளை போதிய அளவு இல்லை என புகார்கள் வந்துள்ளன. புகார் வந்ததும் துரித கதியில் நடவடிக்கை எடுக்கிறோம். புதிய ரூபாய் நோட்டுக்கள் சந்தையில் கிடைப்பது தற்போது அதிகரித்துள்ளது. மதிப்பை ஈடுகட்டுவதற்காக, முதலில் 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவதில் ஆர்வம் காட்டி வந்தோம். தற்போது, புதிய ரூ.500 நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி விரைவாக நடந்து வருகிறது.

சட்ட விரோத பண மாற்றல்களை கட்டுப்படுத்த வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். வங்கிகள் தங்களிடமுள்ள வங்கி கணக்குகளை, தீவிர கண்காணிப்பு செய்து வருகின்றன.

English summary
Initial focus was to supply 2000 notes to replace value that was taken out of the market, say Economic Affairs Secretary Shaktikanta Das.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X