For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டிற்கு வராத பிரதமர்.. ஆனாலும் டிரெண்ட் ஆகும் கோ பேக் மோடி.. எங்கு தெரியுமா?

பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து டிவிட்டரில் #GoBackModi ஹேஷ்டேக் மீண்டும் பெரிய அளவில் டிரெண்டாகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    #GoBackModi trends | தமிழ்நாட்டிற்கு வராத பிரதமர்.. டிரெண்ட் ஆகும் கோ பேக் மோடி.. எங்கு தெரியுமா?

    சென்னை: பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து டிவிட்டரில் #GoBackModi ஹேஷ்டேக் மீண்டும் பெரிய அளவில் டிரெண்டாகிறது. ஆனால் இந்த முறை கோ பேக் மோடியை டிரெண்ட் செய்வது தமிழர்கள் கிடையாது, ஜார்க்கண்ட் மக்கள். ஆனால் இதற்கு எதிராக பாஜகவும் கடுமையாக பதில் டிவிட்களை செய்து வருகிறது.

    பிரதமர் மோடி எப்போது தமிழகம் வந்தாலும் அவருக்கு எதிராக #GoBackModi என்ற ஹேஷ்டேக் வைரலாவது வழக்கம். மோடி தமிழகத்திற்குள் நுழைய கூடாது என்று கருப்பு கொடி காட்டி திமுக போராடியதில் இருந்தே இந்த #GoBackModi டிரெண்டாகி வருகிறது.

    இந்த டிரெண்ட் உலகம் முழுக்க வைரல் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக தமிழகத்தின் இந்த #GoBackModi 4 முறை வைரல் ஆனது.

    பாகுபலி 3.0.. மகளின் வருகையால் கோபம் அடைந்த அஜித் பவார்.. சரத் பவாரின் முதுகில் குத்திய பின்னணி! பாகுபலி 3.0.. மகளின் வருகையால் கோபம் அடைந்த அஜித் பவார்.. சரத் பவாரின் முதுகில் குத்திய பின்னணி!

    பெரிய வைரல்

    பெரிய வைரல்

    இதில் 2 முறை இந்த டேக் உலக அளவில் முதல் இடம் பிடித்தது. இதன் காரணமாக பாஜகவிற்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. இதற்கு எதிராக பாஜகவினர் நிறைய ஹேஷ்டேக்குள் உருவாக்கினாலும், #GoBackModi அளவிற்கு எதுவும் உலக அளவில் வைரலாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த முறை

    கடந்த முறை

    கடந்த முறை சீன அதிபர் ஜி ஜின்பிங் மோடி ஆகியோர் மாமல்லபுரத்தில் சந்தித்த போது கூட இந்த டேக் பெரிய அளவில் வைரலானது. இந்த நிலையில் தற்போது இந்த டேக் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த முறை இந்த டேக்கை ஜார்கண்ட் மாநிலம் வைரலாக்கி வருகிறது.

    ஏன் அப்படி

    ஏன் அப்படி

    ஆம் இந்த முறை கோ பேக் மோடியை டிரெண்ட் செய்வது தமிழர்கள் கிடையாது, ஜார்க்கண்ட் மக்கள். பிரதமர் மோடி ஜார்கண்ட் மாநிலத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக சென்று இருக்கிறார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தற்போது அங்கு இந்த டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

    இரண்டு

    இரண்டு

    இந்த #GoBackModi ஹேஷ்டேக் மீண்டும் தேசிய அளவில் டிரெண்டாகிறது. தற்போது தேசிய அளவில் இந்த டேக் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதில் டிவிட்டுகள் போடப்பட்டு வருவதால் தேசிய அளவில் இது மீண்டும் முதலிடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.

    பாஜக பதிலடி

    பாஜக பதிலடி

    ஆனால் இதற்கு எதிராக பாஜகவும் கடுமையாக பதில் டிவிட்களை செய்து வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்திற்கு மோடி செய்த நன்மைகள், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் வைத்து பாஜக இதற்கு காலையில் இருந்து பதிலடி கொடுத்து வருகிறது.

    English summary
    Following Tamilnadu, Now Jharkhand people trends #GoBackModi in Twitter National wide.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X