For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகிய பாய்சுங் பூட்டியா... காரணம் என்ன?

திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பாய்சுங் பூட்டியா விலகி இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பாய்சுங் பூட்டியா விலகி இருக்கிறார். இது அந்த கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய கால்பந்து உலகின் அடையாளமாக இருந்தவர் பாய்சுங் பூட்டியா. முன்னாள் இந்திய கால்பந்து கேப்டனான இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார்.

ஆனால் தற்போது கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். இதற்கு காரணம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

திரிணாமுல் காங்கிரஸ் விருப்பம்

திரிணாமுல் காங்கிரஸ் விருப்பம்

இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் 2013ல் இணைந்தார். அதற்கு முன்பே அவர் அந்த கட்சிக்கு நெருக்கமாக இருந்தார். அரசியலில் விளையாட்டு வீரர்களும் இருக்க வேண்டும் என்பதற்காக இவர் கட்சியில் இணைந்தார்.

தேர்தல் தோல்வி

தேர்தல் தோல்வி

2014ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் இவர் போட்டியிட்ட தேர்தலில் தோல்வி அடைந்தார். அந்த தொகுதியில் பாஜக கட்சியின் எஸ்எஸ் அலுவாலியாவிடம் 1,96,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

விலகினார்

தற்போது இவர் கட்சியில் இருந்து விலகியதாக அறிவித்து உள்ளார். இதற்காக ''திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் இன்று நான் விலகுகிறேன். எனக்கு கட்சிக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

காரணம்

காரணம்

இவர் மேற்கு வங்கத்தில் இருந்து கோர்காலேண்ட் பிரிவதற்கு ஆதரவு அளித்து இருந்தார். கோர்காலேண்ட் தனி மாநில கோரிக்கைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் அதற்கு ஆதரவாக இவர் பேசி இருந்ததால் கட்சியினர் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருந்தது.

English summary
Former footballer Bhaichung Bhutia on Monday confirmed that he has quit the Trinamool Congress (TMC) and is not associated with any political party. Bhutia had contested from Darjeeling Lok Sabha seat in 2014 and Siliguri Assembly constituency in 2016 on TMC tickets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X