For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வராக குமாரசாமி நாளை பதவியேற்பு... பல கட்சி தலைவர்கள் உள்பட 1 லட்சம் பேர் திரள வாய்ப்பு

குமாரசாமி முதல்வராக நாளை பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்ள ஏராளமான அரசியல் தலைவர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    முதல்வராக குமாரசாமி பதவியேற்பில் இவர்களெல்லாம் பங்கேற்கிறார்கள்- வீடியோ

    பெங்களூர்: கர்நாடகா முதல்வராக நாளை குமாரசாமி பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்ள ஏராளமான அரசியல் தலைவர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கர்நாடகத்தில் முதல்வராக குமாரசாமி நாளை பதவியேற்கிறார். இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை அன்று அவர் பெரும்பான்மையை நிரூபிக்கிறார்.

    கண்டீரவா மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவுக்கு ஏராளமான அரசியல் தலைவர்களை குமாரசாமி அழைத்துள்ளார். சுமார் 1 லட்சம் பேர் மைதானத்துக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    இதுகுறித்து தேவகௌடா கூறுகையில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளவர்கள் வைக்காதவர்கள் என அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் அழைத்துள்ளோம். இந்த மேடை பாஜகவுக்கு எதிராக மதசார்பற்ற , ஜனநாயக சக்திகள் ஒன்று திரள முதல் நடவடிக்கையாக இருக்கும் என்றார்.

    அரசியல் தலைவர்கள்

    அரசியல் தலைவர்கள்

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபாரூக் அப்துல்லா, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒரிஸா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அஸ்ஸாம் முத்லவர் பிரபுல்லா குமார் மஹான்தா, மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி. ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஏற்பாடுகள் தீவிரம்

    ஏற்பாடுகள் தீவிரம்

    இவர்கள் அல்லாது சோனியா மற்றும் ராகுல் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக உள்ளன. 20 எல்இடி டிவிகள் மூலம் இந்த நிகழ்ச்சி நேரலை செய்யப்படுகிறது.

    கண்டீரவா மைதானம்

    கண்டீரவா மைதானம்

    30 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விழா பேலஸ் மைதானத்தில் நடத்தவும் சட்டசபையில் நடத்தவும் திட்டமிடப்பட்டு பின்னர் கண்டீரவா மைதானத்தில் நடைபெறுகிறது.

    English summary
    A galaxy of leaders from what is being called as a joint opposition will descend upon Bengaluru to attend the swearing-in-ceremony of H D Kumaraswamy on Wednesday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X