For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய ராணுவ வரலாற்றில் முதல் முறை.. பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு பணியில் பெண் வீரர்கள்.. நன்மைகள் பல

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் எல்லைகட்டுப்பாட்டு பகுதிகளில், முதல் முறையாக பெண் ராணுவ வீரர்கள், நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய ராணுவ வரலாற்றில் காம்பேக்ட் பணிக்காக எல்லையில் பெண்களை பயன்படுத்துவது இதுதான் முதல் முறையாகும்.

அசாம் ரைபிள் படையை சேர்ந்த பெண் பட்டாலியனை சேர்ந்த வீரர்கள், வடக்கு காஷ்மீரின் தங்டார் செக்டாரில், நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். கேப்டன் குர்சிம்ரன் கவுர் தலைமையில் மொத்தம் 30 பெண் ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

குர்சிம்ரன் கவுர், அவரது குடும்பத்தில் மூன்றாவது தலைமுறை ராணுவ அதிகாரியாகும்.

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானிக்கு உயரிய விருது...பாகிஸ்தான் தீர்மானம்!! காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானிக்கு உயரிய விருது...பாகிஸ்தான் தீர்மானம்!!

பாசிட்டிவ்

பாசிட்டிவ்


மேலும், எல்லைப் பகுதியில், காம்பேக்ட் டியூட்டி எனப்படும் இதுபோன்ற பணிகளுக்கு பெண் ராணுவ வீரர்களை நியமிப்பது இதுதான் முதல் முறையாகும்.
பெண்களை எல்லையோர பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டதால் மற்றொரு பாசிட்டிவ் விஷயமும் நடந்துள்ளது.

நட்பு

நட்பு

அங்குள்ள காஷ்மீர் மக்களுடன் குறிப்பாக பெண்களுடன், அவர்கள் எளிதாக நட்புறவை பேண முடிகிறது. மக்களிடம் எளிதாக கலந்து பேச முடிகிறது. ராணுவ வீரர்கள் என்றாலே பொதுவாக ஒரு அச்சம் மக்களிடம் இருக்கும். ஆனால் பெண் ராணுவ வீரர்களிடம் அச்சத்தை தாண்டி கனிவு காணப்படுகிறது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

கலவர கட்டுப்பாடு

கலவர கட்டுப்பாடு

கூட்டத்தை கட்டுப்படுத்துவது, உளவுத்துறை தகவல்களை உள்ளூர் மக்கள் வாயிலாக பெறுவது உள்ளிட்டவற்றுக்கு பெண் ராணுவ வீரர்கள், உதவிகரமாக உள்ளனர். பெண்கள் என்பதால் வன்முறை செய்வோரும் மரியாதை கொடுத்து விலகி விடுகிறார்களாம்.

Recommended Video

    China- வின் நட்பால் பரிதாப நிலையில் Pakistan
    ஆயுத கடத்தல்

    ஆயுத கடத்தல்

    ஆயுத கடத்தல், போதை மருந்து கடத்தல் போன்ற தகவல்களையும், இவர்கள் மக்களோடு பழகி எளிதாக பெற முடிகிறது. உள்ளூர் பெண்கள் மூலமாக இந்த ராணுவ அதிகாரிகள் எளிதில் தகவல்களை பெற முடிகிறது, என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    For the first time, female soldiers have been deployed in Pakistan's border areas. This is the first time in the history of the Indian Army that women have been used at the border for compact duty.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X