For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உள்ளே போவதும் ஆக்சிஜன்தான்.. வெளியே வருவதும் அதேதான்.. உ.பி. பெண் அமைச்சர் பலே பலே!!

Google Oneindia Tamil News

டேராடூன்: விலங்குகளிலேயே பசு மட்டும் தனி ரகம். அது சுவாசிப்பதும் ஆக்சிஜன்தான், வெளியே விடுவதும் ஆக்சிஜன்தான் என்று முற்றிலும் வினோதமான ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார் உத்தரகாண்ட் மாநில கால்நடைத்துறை அமைச்சர் ரேகா ஆர்யா.

விஞ்ஞானம் படித்த அத்தனை பேரும் சிரிக்கிறார்கள் அமைச்சரின் இந்த அடப் பாவேமே ஸ்டேட்மென்ட்டைப் பார்த்து. இதை வேறு எங்கும் சொல்லவில்லை அமைச்சர், அந்த மாநில சட்டசபையில்தான் இப்படிப் பேசினார் ரேகா ஆர்யா.

பசு மாட்டுக்கு தேசத்தின் அன்னை என்ற அங்கீகாரத்தைக் கொடுக்கக் கோரி உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைக் கொண்டு வந்து பேசியபோதுதான் இப்படி கூறினார் ரேகா ஆர்யா.

பேச்சால் சிரிப்பு

பேச்சால் சிரிப்பு

அமைச்சரின் இந்த பேச்சு பெரும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அறிவியலாளர்கள் கூறுகையில், உலகிலேயே தாவரங்கள் மட்டுமே ஆக்சிஜனை வெளியிடும். கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனை தாவரங்கள் வெளியிடும்.

எப்படி வரும் ஆக்சிஜன்

எப்படி வரும் ஆக்சிஜன்

மற்ற எந்த ஜீவராசியும் ஆக்சிஜனை வெளியிடாது. கார்பன் டை ஆக்சைடுதான் வெளி விடும். இது கூடவா தெரியாமல் கால்நடைத்துறை அமைச்சராக இவர் இருக்கிறாரா் என்று கூறியுள்ளனர்.

நான் சரியாதான் பேசுகிறேன்

நான் சரியாதான் பேசுகிறேன்

இதுகுறித்து அந்த அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, நான் சரியாகத்தான் சொல்கிறேன். உலகிலேயே பசு மட்டும்தான் ஆக்சிஜனை உள்ளிழுத்து, ஆக்சிஜனையே வெளியிடுகிறது. பசுவிடம் உள்ள எல்லாமே புனிதமானது, சுத்தமானது. பால், கோமியம், நெய் என எல்லாமே சுத்தமானது, புனிதமானது.

எல்லாம் சுத்தம்

எல்லாம் சுத்தம்

அதன் உடலில் எந்த அசுத்தமும் இல்லை. கழிவும் இல்லை (அப்ப சாணி??) இதனால்தான் பசு வெளியிடும் வாயு கூட ஆக்சிஜனாகவே வெளியாகிறது என்று அடிக்காத குறையாக கூறியுள்ளார் ரேகா.

அது சரி அது சரி!

English summary
Uttarakhand minister Rekha Arya has said that Cows inhale and exhale Oxygen. This has created furore in that state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X