முன்னாள் சட்டீஸ்கர் முதல்வர் அஜித் ஜோகிக்கு மாரடைப்பு.. மோசமான உடல்நிலை.. தீவிர சிகிச்சை!
ராய்பூர்: முன்னாள் சட்டீஸ்கர் முதல்வர் அஜித் ஜோகி மிக மோசமான உடல்நிலையுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜனதா காங்கிரஸ் சட்டீஸ்கர் கட்சியை சேர்ந்த அஜித் ஜோகி முன்னாள் காங்கிரஸ் எம்பி மற்றும் எம்எல்ஏ ஆவார். சட்டீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்ட போது இவர் அதன் முதல்வராக இருந்தார்.

2000-2003 வரை இவர் காங்கிரஸ் சார்பாக அம்மாநில முதல்வராக இருந்தார். 2016ல் இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இதனால் அவர் ஜனதா காங்கிரஸ் சட்டீஸ்கர் கட்சியை தொடங்கினர். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
மறு அறிவிப்பு வரும்வரை.. இனி எல்லா ஞாயிறும் லாக்டவுன்தான்.. கேரள அரசு அறிவிப்பு.. பினராயி அதிரடி!
ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த இவர் தனக்கு இருந்த அரசியல் தொடர்பு மூலம் காங்கிரஸ் கட்சிக்குள் வந்தார். 74 வயதாகும் இவருக்கு இன்று மதியம் மாரடைப்பு ஏற்பட்டது. தனது வீட்டு தோட்டத்திலேயே இவர் நிலைகுலைந்து விழுந்துள்ளார். இதனால் மோசமான உடல்நிலையுடன் இவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருக்கு சுவாச பிரச்சனை உள்ளதால் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. ராய்பூரில் உள்ள மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.