For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தையும் எட்டியது மோடிக்கு எதிரான போராட்டம்.. குஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம்

தமிழகத்தையும் எட்டியது பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டம் என்று குஜராத்தின் மாஜி ஐபிஎஸ் அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    குஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம்- வீடியோ

    காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான போராட்டம் தமிழகத்தையும் எட்டியது என்று குஜராத்தின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் தெரிவித்தார்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது 13 பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு தமிழகமே கொந்தளித்துள்ளது.

    Former Gujarat IPS officier blames Modi, says Gujarat model in TN firing

    இதற்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குஜராத் மாநில முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கூறுகையில் தூத்துக்குடி சம்பவம் நாம் அனைவருக்கும் விழிப்பை ஏற்படுத்தும் சம்பவமாகும்.

    அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களை ஸ்டெர்லைட் ஆலையில் வேண்டுமென்றே சுட்டுக் கொல்ல வேண்டும் என்பது வேதாந்தா நிறுவனம் நடத்திய ஆபரேஷன் ஆகும்.

    அதிமுகவின் செயல்பாடுகளை பார்க்கும்போது பாஜகவிடம் அவர்கள் தங்களை சரணடைந்து விட்டதாகவே தெரிகிறது என்று தெரிவித்துள்ளார். அது போல் மற்றொரு டுவீட்டில் மோடி தலைமையிலான கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான இந்திய ஏழை மக்களின் போராட்டம் தமிழகத்தை எட்டியுள்ளது. வேதாந்தா காப்பர் நிறுவனத்திற்கு எதிராக போராடிய 13 போராட்டக்காரர்களை போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இவர்களை நகர்ப்புற நக்சலைட்டுகள் என்று கார்ப்பரேட்டுகளால் கட்டுப்படுத்தப்படும் ஊடகங்கள் முத்திரை குத்தும் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Former IPS officer Sanjiv Bhatt says that War of India's poor against Modi led corporates reaches Tamil Nadu. Police kills 13 protesting against Vedanta Copper Unit! Now the corporate controlled media will brand the protestors as Urban Naxalites.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X