For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி கைது

Google Oneindia Tamil News

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரிக்கும் மசோதா இன்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நிறைவேறிய சிறிது நேரத்திலேயே மெகபூபா முப்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

Former J&K Chief Minister Mehbooba Mufti arrested by police

ஏற்கனவே 370-வது பிரிவை ரத்து செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் மெகபூபா முப்தி. இதையடுத்து அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

புதிய வானம்.. புதிய பூமி.. எங்கும் பனிமழை பொழிகிறது.. 370 சட்டப்பிரிவு ரத்தால் தமிழக பாஜக படுகுஷி! புதிய வானம்.. புதிய பூமி.. எங்கும் பனிமழை பொழிகிறது.. 370 சட்டப்பிரிவு ரத்தால் தமிழக பாஜக படுகுஷி!

தற்போது மெகபூபா முப்தியை கைது செய்துள்ள போலீசார் அவரை விருந்தினர் மாளிகையில் தங்க வைத்துள்ளனர். முன்னதாக ராஜ்யசபாவில் மக்கள் ஜனநாயக் கட்சியின் எம்.பிக்கள், 370-வது பிரிவை ரத்து செய்யும் ஜனாதிபதியின் அறிவிக்கையை கிழித்து எறிந்தனர். இதனால் இரு எம்.பிக்களும் சஸ்பென்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உமர் அப்துல்லாவும் கைது

மெகபூபா முப்தியைத் தொடர்ந்து முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான உமர் அப்துல்லாவும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் காஷ்மீரில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

English summary
Former Jammu Kashmir Chief Minister Mehbooba Mufti was arrested by Police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X