For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரஸில் இணைந்தார் கன்னையா குமார் .. ஜிக்னேஷ் மேவானியும் ஆதரவு.. குஜராத் அரசியலில் திருப்பம்

Google Oneindia Tamil News

அஹமதாபாத் : முன்னாள் ஜேன்யு பல்லைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமார் செப்டம்பர் 28ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். குஜராத் சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளார். குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி இந்த மாற்றம் அங்கு நடந்துள்ளது.

குஜராத்தின் சுயேட்சை எம்எல்ஏ மற்றும் செல்வாக்கு மிக்க தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானி, செப்டம்பர் 28 ஆம் தேதி காங்கிரஸில் சேருவதாக அறிவித்து இருந்தார். இதேபோல முன்னாள் ஜேன்யு பல்லைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமாரும் காங்கிரஸ் கட்சியில் சேருவதாக கூறியிருந்தார்.

தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானி 2017 ல் குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வட்கம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸின் ஆதரவுடன் வெற்றி பெற்றார். அவர் அண்மையில் செய்தியாளர்களிடம் கூறும் போது "செப்டம்பர் 28 ஆம் தேதி, நான் இந்திய தேசிய காங்கிரசில் கன்ஹையா குமாருடன் சேரப் போகிறேன்," என்று அவர் பிடிஐயிடம் கூறினார், அதன் பிறகு தான் முடிவைப் பற்றி விரிவாகப் பேச முடியும் என்று கூறியிருந்தார்.

10 ஆண்டுகளுக்கான செம்மொழி தமிழ் விருதுகளை அறிவித்தது தமிழக அரசு 10 ஆண்டுகளுக்கான செம்மொழி தமிழ் விருதுகளை அறிவித்தது தமிழக அரசு

இளம் தலைவர்கள்

இளம் தலைவர்கள்

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகப் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து பிரச்சாரங்களையும், போராட்டங்களை அறிவிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் இளம் தலைவர்கள் ஜிதன்பிரசாதா, பிரியங்கா சதுர்வேதி, சுஷ்மிதா தேவ் போன்றோர் வெளியேறிவிட்டார்கள்.

ராகுல் விருப்பம்

ராகுல் விருப்பம்

இதனால், பிரச்சாரத்துக்கு வலுவான இளம் தலைவர்கள், இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பேசக்கூடியவர்கள் தேவை என்பதால், கன்னையா குமாருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் கட்சியில் இளம் தலைவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிகமான முக்கியத்துவம் வழங்க ராகுல் காந்தி விரும்புவதாக கூறப்படுகிறது அதன் காரணமாகவே கன்னையா குமார் இணைகிறார் என்றும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி கன்னையா குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் சமீபகாலமாக தொடர்பில் இருந்து வந்ததால் அவர் காங்கிரசில் சேருவது உறுதியானது.

ஜிக்னேஷ் மேவானி

ஜிக்னேஷ் மேவானி

குஜராத் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெ உள்ளது. கடந்த முறை கடும் போட்டி கொடுத்த காங்கிரஸ் இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று போராடி வருகிறது. எனவே அதற்கு முன்னோட்டமாகத்தான் ஜிக்னேஷ் மேவானி கன்னையா குமார் இணைவு பார்க்கப்படுகிறது.

இணைந்தார்

இணைந்தார்

இந்தநிலையில் கன்னையா குமார் இன்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் அவர் காங்கிரஸில் இணைந்தார்.

ஜிக்னேஷ் மேவானி

ஜிக்னேஷ் மேவானி

அதேசமயம் குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி இன்று காங்கிரஸில் இணையவில்லை. அவர் கட்சிக்கு ஆதரவு மட்டுமே தெரிவித்தார். அவர் தற்போது எம்எல்ஏ என்பதால் கட்சி தாவல் தடைச் சட்டத்தால் இடையூறு வரலாம் என்பதால் அவர் அதிகாரபூர்வமாக காங்கிரஸில் இணையவில்லை என கூறப்படுகிறது.

English summary
former JNU student leader Kanhaiya Kumar join Congress. Gujarat MLA Jignesh Mevani support to congress. The development comes ahead of the next year’s assembly elections in the BJP-ruled Gujarat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X