For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அஸ்ஸாம் குடிமக்கள் பதிவேட்டில் முன்னாள் ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி முகமது குடும்பத்தினர் பெயர் இல்லை!

Google Oneindia Tamil News

Recommended Video

    அஸ்ஸாம் குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்ட முன்னாள் ஜனாதிபதி குடும்பத்தினர் பெயர்கள்

    குவஹாத்தி: அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் முன்னாள் ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி முகமது குடும்பத்தினர் பெயர் விடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அஸ்ஸாமில் குடியேறிய வெளிநாட்டினரை அடையாளம் காண்பதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நடைபெற்று வந்தன.

    Former President Fakhruddin Ali Ahmed family members missing in Assam NRC

    இதனை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி 2013-ல் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்புப் பணி தொடங்கியது. 1951-ம் ஆண்டு பதிவேட்டில் இடம்பெற்றவர்கள், 1971-ம் ஆண்டுக்கு முன்பு இந்திய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றோருக்கு தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்தர முடிவு செய்யப்பட்டது.

    இதனடிப்படையிலான வரைவுபட்டியல் கடந்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி வெளியிடப்பட்டது. ஆனால் 40,00,000 பெயர்கள் அப்பட்டியலில் விடுபட்டதால் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.

    120 நாட்கள் இருக்கு.. கவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்.. 19 லட்சம் பேருக்கு ஆறுதல் கூறிய அசாம் அரசு!120 நாட்கள் இருக்கு.. கவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்.. 19 லட்சம் பேருக்கு ஆறுதல் கூறிய அசாம் அரசு!

    இதையடுத்து விடுபட்டோர் பெயரை சேர்த்து இறுதிப்பட்டியலை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி நேற்று இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சம் பெயர்கள் விடுபட்டுள்ளதால் அஸ்ஸாமில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    முன்னாள் ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி முகமது குடும்பத்தினர் பெயரும் கூட இப்பட்டியலில் இடம்பெறவில்லை. அதேபோல் ராணுவத்தில் பணியாற்றியவர்கள், எம்.எல்.ஏக்களாக இருந்தவர்களது பெயரும் விடுபட்டிருக்கிறது.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, உண்மையான இந்தியர்கள் பெயர்கள் இப்பட்டியலில் இடம்பெறவில்லை. 1 லட்சம் கூர்க்கா இனத்தவர் பெயர் விடுபட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி முகமது குடும்பத்தினர் பெயர்களும் விடுபட்டிருக்கிறது என்றார்.

    English summary
    West Bengal Chief Minister Mamata Banerjee tweets that "In Fact, names of thousands and thousands of genuine Indians, including those of CRPF and other jawans, family members of former President Fakhruddin Ali Ahmed, have been excluded.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X