For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெயில் படாமல் இருக்க வண்ண குடைகள் சூழ வாஜ்பாயின் இறுதி யாத்திரை

வெயில் படாமல் இருக்க வண்ண குடைகள் சூழ வாஜ்பாயின் இறுதி யாத்திரை தொடங்கியுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: வெயில் படாமல் இருக்க வண்ண குடைகள் சூழ வாஜ்பாயின் இறுதி யாத்திரை நடைபெற்றது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் இரவு 9.30 மணியளவில் கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் நேற்றிரவே வாஜ்பாயின் இல்லத்தில் அஞ்சலி செலுத்தினர்.

அண்டை நாட்டு தலைவர்கள்

அண்டை நாட்டு தலைவர்கள்

இதைத்தொடர்ந்து தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள், ஆளுநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அண்டை நாட்டு தலைவர்கள் வாஜ்பாயின் உடலுக்கு இன்று காலை அஞ்சலி செலுத்தினர்.

பாஜக அலுவலகம்

பாஜக அலுவலகம்

பின்னர் அவரது உடல் முப்படை மரியாதையுடன்
கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள அவரது வீட்டில் இருந்து
பண்டிட்தீன் தயாள் உபாத்யாய் மார்க்கில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு அலங்கரிக்கப்பட்ட ராணுவ ஊர்தியில் ஊர்வலமாக பாஜக அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இறுதி யாத்திரை தொடக்கம்

இறுதி யாத்திரை தொடக்கம்

பிற்பகல் வரை பாஜகவினர், பொதுமக்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது உடல் ராஜ்காட் அருகே உள்ள விஜய்காட் பகுதிக்கு இறுதியாத்திரையாக எடுத்து செல்லப்பட்டது.

நடந்து சென்ற மோடி

நடந்து சென்ற மோடி

பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் முன்னே நடந்து செல்ல முப்படை வீரர்கள் மரியாதையுடன், லட்சக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ வாஜ்பாயின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

வெயில் படாமலிருக்க குடைகள்

வெயில் படாமலிருக்க குடைகள்

வெயில் படாமல் இருக்க வண்ண குடைகள் வாஜ்பாயின் புகழுடலுக்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. வாஜ்பாயின் உடல் செல்லும் வழியில் தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்திய வண்ணம் சென்றனர்.

English summary
Former Prime Minister Vajpayee's last journey has been started in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X