For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

82 வயசாய்ருச்சு.. 28 வருடமாக விடாமல்.. விரதமிருக்கும் பாட்டி.. எதற்காக.. ஆச்சரிய தேவி!

Google Oneindia Tamil News

ஜபல்பூர்: ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று 1992ஆம் ஆண்டில் இருந்து வெறும் பழங்கள் சாப்பிட்டு, மோர் மட்டும் குடித்து வருகிறார் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயது மூதாட்டி. இவர் ஒரு முன்னாள் சமஸ்கிருத ஆசிரியை. இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு, கோயில் கட்டி முடிக்கும் வரை இதையே தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது முன்னாள் சமஸ்கிருத ஆசிரியை ஊர்மிளா தேவியின் ஆசை, எண்ணம், விருப்பம். ஜபல்பூரைச் சேர்ந்த இவர் 1992ஆம் ஆண்டில் இருந்து இதற்காக விரதம் இருந்து வருகிறார். அதாவது அவரது 54வது வயதில் இருந்து விரதம் இருந்து வருகிறார்.

former sanskrit teacher fast from 1992 for Ram Temple to be built in Ayodhya

கடந்தாண்டு இறுதியில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர், இவரது விரதத்தை முடித்துக் கொள்ளுமாறு, பலரும் கேட்டுள்ளனர். ஆனாலும், இதற்கு மறுத்துள்ளார். அயோத்தியில் கோயில் உருவான பின்னர், அதை பார்த்த பின்னர்தான் விரதத்தை முடித்துக் கொள்வேன் என்று கட்டாயமாக தெரிவித்து விட்டார். அயோத்தி தீர்ப்புக்குப் பின்னர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி நன்றி தெரிவித்துள்ளார்.

ஆனாலும், தொடர்ந்து இவர் விரதம் இருப்பதால், உடல் நலம் பாதிக்கப்படும் என்று அவரது குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். அவரது மகன் சதுர்வேதி கூறுகையில், ''அவரது உடல் நலம் பாதிக்கப்படுமோ என்று நாங்கள் வருத்தப்படுகிறோம். நாங்கள் கேட்டுக் கொள்வதையும் மறுத்து தொடர்ந்து விரதம் இருக்கிறார்.

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை.. இக்பால் காயத்ரிக்கு ஸ்பெஷல் அழைப்பு.. யார் இவங்க? அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை.. இக்பால் காயத்ரிக்கு ஸ்பெஷல் அழைப்பு.. யார் இவங்க?

கோயில் தற்போதைக்கு கட்டப்பட மாட்டாது, விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள் என்று பலரும் கேட்டுக் கொண்டும் கைவிடவில்லை. அப்போதெல்லாம், கோயில் கற்களால் கட்டப்படும் என்று கூறுவார். அர்ப்பணிப்புடன் எடுக்கப்படும் முடிவுகள் எப்போதும் நிறைவேறும் என்பதற்கு எனது தாய் உதாரணம்'' என்கிறார்.

English summary
former sanskrit teacher fast from 1992 for Ram Temple to be built in Ayodhya
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X