For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாலியல் புகார்: ஊடக நிறுவனங்களிடம் ரூ.5 கோடி கேட்டு நீதிபதி சுவதேந்தர் குமார் அவதூறு வழக்கு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: பாலியல் புகாரில் சிக்கியுள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராகவும் இருந்து வரும் சுவதேந்தர் குமார், தன் மீது அவதூறு செய்திகள் வெளியிட்டதாக இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் ஒரு ஆங்கில நாளிதழ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபது ஜி.எஸ்.சிஸ்டானி முன்னிலையில் மூத்த வழக்கறிஞர்கள் மணீந்தர் சிங், என்.கே.கவுல் ஆகியோர் சுவதேந்தர் குமார் சார்பில் வழக்கை பதிவு செய்ததோடு, அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் எனவும் கோரினர்.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், தன் மீதான பாலியல் புகார் குறித்த செய்திகளை ஊடகங்கள் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்றும் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் ஒரு ஆங்கில நாளிதழும் நஷ்டஈடாக தர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கூரிய ஊடக நிறுவனங்களுக்கு தவறான மற்றும் நம்பகத்தன்மை அற்ற செய்திகளை வெளியிட்டதாக சுவதேந்தர் குமார் ஏற்கெனவே,கடந்த 11-ஆம் தேதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Former Supreme Court judge and National Green Tribunal Chairperson Swatanter Kumar on Wednesday moved the Delhi High Court seeking to restrain the media from reporting the alleged sexual assault case of his former woman law intern.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X