For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

9 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மூத்த காங். தலைவர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி காலமானார்

9 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மேற்கு வங்க மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் பிரயரஞ்சன் தாஸ்முன்ஷி இன்று காலமானார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    9 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மூத்த காங். தலைவர் காலமானார்- வீடியோ

    டெல்லி : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்தியமைச்சருமான பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 72.

    மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவர், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராகவும், ஒளிபரப்புத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.

     Former Union Minister PriyaRanjan Dasmunsi Passed away today

    2008ம் ஆண்டு ஏற்பட்ட மாரடைப்பால் இவரது இடதுபக்க உடல் செயலிழந்து போனது. இதனைத் தொடர்ந்து மூளைக்கு இரத்தப்போக்கு இல்லாததால், சுயநினைவின்றி கோமாவில் இருந்தார்.

    9 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி. நினைவு திரும்பாமலேயே இன்று டெல்லி அப்போலோ மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 72.

    20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராகவும் பதவி வகித்தவர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி. பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    English summary
    Veteran Congress Leader and Former Union Minister PriyaRanjan Dasmunsi Passed away today at Delhi Apllo Hospital. He was in Coma for the past eight years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X