For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெய்ப்பூர் வருகிறார் கிளிண்டன்... மதிய உணவு சமையல் கூடத்தை ஆய்வு செய்கிறார்!

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஜெய்ப்பூரில் இயங்கும் தொண்டு நிறுவனம் ஒன்றில் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு தயார் செய்யும் கூடத்தை பார்வையிட திட்டமிட்டிருக்கிறார்.

நாளை முதல் 23ம் தேதி வரை ஆசிய பசிபிக் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அமெரிக்க முன்னாள் அதிபரான பில் கிளிண்டன். அதன் ஒரு பகுதியாக, இன்று இரவு அவர் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார்.

Former US President Bill Clinton arrives in Jaipur

சமையல் கூடம்...

நாளை, ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர், ஜெகத்புரா பகுதியில் அரசு சாரா தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு தயார் செய்யும் இடத்தை நாளை அவர் பார்வையிடுகிறார்.

சமுதாய நலக்கூடம்...

அதனைத் தொடர்ந்து, 17ம் தேதி லக்னோவில் உள்ள பள்ளி மற்றும் சமுதாய நலக்கூடத்தை கிளிண்டன் பார்வையிடுவார் என அவரது அறக்கட்டளை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆய்வுப்பணி...

இப்பயணம் இந்தியா, வியட்நாம், இந்தோனேசியா, பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள கிளிண்டன் அறக்கட்டளை பணிகளை ஆய்வு செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.

எய்ட்ஸ் மாநாடு...

இந்தச் சுற்றுப்பயணத்தின் ஒருகட்டமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள 20-வது சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு கிளிண்டன் உரையாற்ற உள்ளார்.

English summary
Former US President Bill Clinton arrived here on a tour during which he will visit a kitchen being run for schoolchildren by an NGO.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X