For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ம.பி.: மேலும் 4 காங். ஆதரவு பாஜக எம்.எல்.ஏக்கள் என் கஸ்டடியில்.. கம்ப்யூட்டர் பாபா திகுதிகு

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை ஆதரிக்கும் மேலும் 4 பாஜக எம்.எல்.ஏக்கள் தம்முடைய கட்டுப்பாட்டில் இருப்பதாக சர்ச்சைக்குரிய சாமியார் கம்ப்யூட்டர் பாபா கூறியுள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் சிவ்ராஜ்சிங் சவுகான் ஆட்சிக் காலத்தில் கம்ப்யூட்டர் பாபா உள்ளிட்ட சாமியார்கள் சிலர் திடீரென அமைச்சர்களாக்கப்பட்டனர். பின்னர் கம்ப்யூட்டர் பாபா பதவியை ராஜினாமா செய்தார்.

Four BJP MLAs in touch with me, says Computer Baba

லோக்சபா தேர்தலின் போது போபாலில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங்குக்கு கம்ப்யூட்டர் பாபா ஆதரவு தெரிவித்தார். அத்துடன் 7,000 சாதுக்களை வைத்து திக்விஜய்சிங் வெற்றிக்காக யாகம் செய்து பரபரப்பை கிளப்பினார். ஆனால் திக்விஜய்சிக் பாஜகவின் சாத்வி பிரக்யாசிங்கிடம் தோற்றார்.

தற்போது மீண்டும் அரசியல் களத்துக்கு திரும்பியிருக்கிறார் கம்ப்யூட்டர் பாபா. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசை 24 மணிநேரத்தில் கவிழ்க்க முடியும் என பாஜக தலைவர்கள் சவால் விட்டனர்.

பெண் எம்பிக்கள் இருக்கிறோம்.. கொஞ்சம் டீசண்டா பேசுங்க.. லோக்சபாவில் பொங்கிய ஸ்மிரிதி இராணி! பெண் எம்பிக்கள் இருக்கிறோம்.. கொஞ்சம் டீசண்டா பேசுங்க.. லோக்சபாவில் பொங்கிய ஸ்மிரிதி இராணி!

இதற்கு பதிலடியாக பாஜக எம்.எல்.ஏக்கள் 2 பேரை 'தாய்வீட்டுக்கு' திரும்ப அழைத்துக் கொண்டதாக காங்கிரஸ் அறிவித்தது. அந்த 2 எம்.எல்.ஏக்களும் தற்போது காங்கிரஸ் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர்.

இதனால் மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கம்ப்யூட்டர் பாபா, காங்கிரஸ் அரசை ஆதரிக்கும் 4 பாஜக எம்.எல்.ஏக்கள் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர். முதல்வர் கமல்நாத் என்னிடம் கூறினால் அந்த 4 பேரையும் உங்களிடம் அழைத்து வருகிறென். 4 பேரும் அமைச்சரவையில் சேர விரும்புகின்றனர் என்றார்.

கொளுத்திப் போடுங்கப்பா!

English summary
Self styled godman Computer Baba has said that four BJP MLAs in Madhya Pradesh are in touch with him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X