For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெறும் 251 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்... நம்ம இந்தியாவில்!

Google Oneindia Tamil News

டெல்லி: மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரூ. 251 மட்டுமே விலை கொண்ட ஸ்மார்ட் போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகிறது.

இந்தியாவைச் சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் என்ற நிறுவனம்தான் இந்த செல்போனை அறிமுகப்படுத்துகிறது. உலகிலேயே மிகவும் விலை மலிவான ஸ்மார்ட் போன் என்ற பெருமையும் இந்த போனுக்குக் கிடைத்துள்ளது.

இன்று அறிமுகமாகும் இந்தப் போனை பெற முன்பதிவு செய்ய வேண்டும். நாளை காலை 6 மணி முதல் 21ம் தேதி இரவு 8 மணிக்குள் முன்பதிவு செய்வோருக்கு முதல் கட்டமாக இந்த போன் விற்பனை செய்யப்படவுள்ளது.

ப்ரீடம் 251

ப்ரீடம் 251

ப்ரீடம் 251 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ. 500 ஆக முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இதன் விலை ரூ. 251 மட்டுமே என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆண்ட்ராய்டு போன்

ஆண்ட்ராய்டு போன்

இது ஆண்ட்ராய்டு போன் ஆகும். இதில் 4 இன்ச் க்யூஎச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே இருக்கும். 3.2 மெகா பிக்ஸல் ஆட்டோ போகஸ் கேமரா, 0.3 மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா, 1.3 ஜிஎச்இச் குவாட் கோர் பிராசர், 1ஜிபி ராம், 8ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் (எஸ்டி கார்ட் சப்போர்ட்டுடன்), 1450 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் ஓஎஸ் என கலக்கலான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

ஒரு வருஷ வாரண்ட்டி

ஒரு வருஷ வாரண்ட்டி

இந்த போனுக்கு ஒரு வருட வாரண்ட்டி உண்டு. இதில் ஹோஸ்ட் யூனிட்டுக்கு மேலும் 12 மாத கால நீட்டிப்பும், பேட்டரி - சார்ஜருக்கு 6 மாத கால நீட்டிப்பும், இயர்போனுக்கு 3 மாத கால நீட்டிப்பும் உண்டு.

புக்கிங் செய்ய வேண்டும்

புக்கிங் செய்ய வேண்டும்

இந்த போனைப் பெற விரும்புவோர் நாளை காலை 6 மணியிலிருந்து 21ம் தேதி இரவு 8 மணிக்குள் புக் செய்ய வேண்டும். அவர்களுக்கு முதல் கட்டமாக இது கிடைக்கும்.

மனோகர் பாரிக்கர் தொடங்கி வைக்கிறார்

மனோகர் பாரிக்கர் தொடங்கி வைக்கிறார்

மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் இந்த விலை மலிவான ஸ்மார்ட் போனை இன்று தொடங்கி வைக்கிறார். நொய்டாவைச் சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் என்ற நிறுவனம்தான் இந்த ஸ்மார்ட் போனை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

உலகின் முதல் விலை மலிவு ஸ்மார்ட் போன்

உலகின் முதல் விலை மலிவு ஸ்மார்ட் போன்

இந்த போன்தான் உலகிலேயே மிகவும் விலை மலிவான ஸ்மார்ட் போனாகும். தற்போது மார்க்கெட்டில் குறைந்தபட்ச விலையாக ரூ. 1500க்கு ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகின்றன.

ரிலையன்ஸை முந்தியது

ரிலையன்ஸை முந்தியது

முன்பு அனில் அம்பானியின் ஆர் காம் நிறுவனம் ரூ. 999க்கு ஸ்மார்ட்போன் தரப் போவதாக அறிவித்தது. ஆனால் இதுவரை அது நனவாகவில்லை. இந்த நிலையில் அதிரடியாக ரூ. 251க்கு போனை களம் இறக்குகிறது ரிங்கிங் பெல்ஸ்.

ஏற்கனவே ஒரு சாதனை

ஏற்கனவே ஒரு சாதனை

இந்திய மொபைல் போன் சந்தையில் புதுமுகமான ரிங்கிங் பெல்ஸ் ஏற்கனவே ரூ. 2999க்கு இந்தியாவின் மிக மலிவான 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The much-awaited and much talked-about sub-Rs 500 smartphone is coming to India today. Domestic handset maker Ringing Bells is all set to introduce what is believed to be the world's cheapest smartphone at an event in Delhi on February 17.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X