For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விறுவிறுப்பாக நடைபெறும் இந்தியா - நேபாளம் இடையிலான எரிபொருள் குழாய் பதிக்கும் பணி

Google Oneindia Tamil News

மோதிஹாரி: இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு குழாய் மூலம் பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்வதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக திட்ட இயக்குனர் பிரதீப்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்ளை சுலபமாக விநியோகிக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே எண்ணெய் குழாய் பாதை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Fuel pipeline project India - Nepal is in final stage

இதனையடுத்து நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா இந்தியா வந்த போது, பிரதமர் மோடியுடன் இணைந்து இதற்கான பணிகளை தொடங்கி வைத்தார். பீகார் மாநிலம் மோதிஹாரியிலிலிருந்து, நேபாளத்தின் அம்லேக்கஞ்ச் பகுதி வரை 68.9 கி.மீ தூரத்திற்கு எரிபொருள் கொண்டு செல்லும் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகள் வரும் ஆகஸ்ட் மாதம் முடிவடைந்து விடும் என இத்திட்ட இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் முடிவடைந்து செயல்பாட்டிற்கு வந்தால், எரிபொருட்களை கொண்டு செல்லும் செலவு குறையும் என்பதால் நேபாளத்தில் அவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு இருந்தும் ரயில் கொள்ளை..வடமாநில கும்பல் அட்டகாசம்.. பயணிகள் பீதி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு இருந்தும் ரயில் கொள்ளை..வடமாநில கும்பல் அட்டகாசம்.. பயணிகள் பீதி

இத்திட்டத்திற்காக பார்சா தேசிய பூங்கா வழியில் இருந்த சுமார் 6 ஆயிரத்து 500 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இன்னும் 3 கி.மீ தூரத்திற்கு மட்டுமே குழாய் பதிப்பு பணிகள் மீதமுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டின் இறுதியில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்கள் மூலம் மணிக்கு, 2 லட்சம் லிட்டர் எரிபொருள் இடம்பெயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Project Director Pradeep Kumar has informed that the work to transport petroleum products from India to Nepal has reached the final stage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X