For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெட்ரோல், டீசல் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு.. பிரதமர் மோடிக்கு தெலுங்கானாக்காரர் கொடுத்த நூதன பரிசு

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மக்கள் கடும் அதிருப்தி-வீடியோ

    டெல்லி: பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டி வரும் சூழ்நிலையில், பிரதமர் மோடியை நையாண்டி செய்யும் நோக்கத்தில் தெலுங்கானாவை சேர்ந்த சந்து கவுட் என்பவர் நூதன வழியை கையாண்டுள்ளார்.

    தெலுங்கானா மாநிலம், ரஜன்னா சிர்சில்லா மாவட்டத்தை சேர்ந்தவர் சந்து கவுட். இவர் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணா பாஸ்கரை சந்தித்து 9 பைசாவுக்கான காசோலையை வழங்கியுள்ளார்.

    Fuel price hike: Telangana man sends PM Modi cheque for 9 paise

    இந்த காசோலையை பிரதமரின் நிவாரண நிதிக்கு சேர்த்துவிடுமாறு சந்து கவுட் கேட்டுக்கொண்டுள்ளார். பெட்ரோல் விலையை 9 பைசா குறைத்தற்காக இதுபோன்ற நூதன வழியில் தனது எதிர்ப்பை சந்து கவுட் காண்பித்துள்ளார்.

    எரிபொருள் விலைவாசி உயர்வால் விவசாயிகள் தங்கள் டிராக்டர் மற்றும் விவசாய சாதனங்களுக்கு எரிபொருளை நிரப்ப கஷ்டப்படுகிறார்கள். தெலுங்கானா மாநில அரசு பெட்ரோலியம் பொருட்கள் மீது 35.2 சதவீத வாட் வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளது. அதனால் அண்டை மாநிலங்களைவிட அங்கு பெட்ரோலிய விலை அதிகமாகும்.

    English summary
    Mocking the recent drop in fuel prices, a man in Rajanna Sirsilla district of Telangana sent a cheque of 9 paise to Prime Minister Narendra Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X