For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை... விழிபிதுங்கி நிற்கும் வாகனஓட்டிகள்!

Google Oneindia Tamil News

டெல்லி: பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்ந்து உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கடந்த ஜூலை மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து வருகின்றன. இதனால் கடந்த 50 நாட்களாக இதன் விலை அதிகரித்து வருகிறது.

Fuel prices sky-rocket, Petrol touches Rs 87.24 in Chennai

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி ஆகியவற்றால் இதன் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.81.75-ஆகவும், டீசல் விலை ரூ.74.41-ஆகவும் இருந்தது. இதைத் தொடந்து கடந்த மாதம் 5-ஆம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.82.41 என்றும் டீசல் ரூ75.39 ஆகவும் இருந்தது.

பின்னர் செப்டம்பர் 10-ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை முறையே ரூ. 83.91 மற்றும் ரூ.76.98 விற்கப்பட்டது. இப்படியே உயர்ந்து கொண்டிருந்த நிலையில் செப்டம்பர் 30-ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.80-க்கும், டீசல் விலை ரூ.79.08-க்கும் விற்கப்பட்டது.

[அவர் ஒன்றும் பிரதமர் அல்ல.. வெறும் பியூன்தான்.. பொசுக்குனு இப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டீங்களே சாமி! ]

நேற்று பெட்ரோல் விலை ரூ.87.05-க்கும் டீசல் விலை ரூ.79.40-க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் காந்தி ஜெயந்தியான இன்றும் அவை உயர்ந்துள்ளன. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 காசுகள் உயர்ந்து ரூ. 87.24-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து ரூ.79.64-க்கு விற்பனையாகிறது.

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 83.85-க்கு விற்பனையாகிறது. மும்பையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே ரூ.91.20 மற்றும் ரூ.79.89-க்கு விற்பனையாகிறது. அதுபோல் கொல்கத்தாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே ரூ. 85.65 மற்றும் ரூ.77.10-க்கும் விற்பனையாகிறது.

English summary
The fuel prices across India hit an all-time high on Tuesday (October 2). The price of petrol was increased by 19 paise in Chennai and it now stands at Rs 87.24 per litre in the state capital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X