For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் சமூக ஆர்வலர் தீஸ்டா முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் செல்கிறார்!!

By Mathi
Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத் வன்முறையில் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் சமூக ஆர்வலர் தீஸ்டா செதல்வாட் தம் மீதான ரூ1.51 கோடி மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய உள்ளார்.

2002ஆம் ஆண்டு குஜராத்தில் வன்முறைகள் நிகழ்ந்த போது குல்பர்க் சொசைட்டி என்ற இடத்தில் நடந்த காங்கிரஸ் முன்னாள் எம்பி எஹ்சான் ஜாப்ரி உட்பட 69 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலையில் குஜராத் முதல்வர் மோடிக்கு தொடர்பில்லை என்று சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்திருந்தது.

Fund embezzlement: Teesta Setalvad to move high court

ஆனால் கொல்லப்பட்ட எஹ்சான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி, மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை அகமதாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த குல்பர்க்கா சொசைட்டி வழக்கை முன்னின்று நடத்தியவர் சமூக ஆர்வலர் தீஸ்டா செதல்வாட். மேலும் குஜராத் படுகொலைகள் தொடர்பாக அம்மாநில அரசுக்கு எதிராக சட்ட ரீதியான போராட்டங்களை தொடர்ந்தும் எதிர்கொண்டு நடத்தி வருபவர் தீஸ்டா செதல்வாட்.

இந்நிலையில் குல்பர்க் சொசைட்டி பகுதியைச் சேர்ந்த 12 குடியிருப்புவாசிகள் தீஸ்டா செதல்வாட் மீது மோசடி புகார் கொடுத்திருப்பதாகக் கூறி குஜராத் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதாவது குல்பர்க் படுகொலையைத் தொடர்ந்து வீடுகள் கட்டித்தரவும், பாதிக்கப்பட்டோருக்கு நிதி உதவி செய்யவும் குல்பர்க் பகுதியை காட்சியகமாக மாற்றவும் ரூ1.51 கோடி நிதியை உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து தீஸ்டா பெற்றதாகவும் அதை பாதிக்கப்பட்ட தங்களுக்காக தீஸ்டா செலவு செய்யாமல் ஏமாற்றிவிட்டார் என்றும் குடியிருப்புவாசிகள் புகார் கொடுத்திருப்பதாக கூறப்பட்டது.

இந்த வழக்கில் தீஸ்டா செதல்வாட் கணவர் ஜாவீத் ஆனந்த், மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஜாகியா ஜாப்ரியின் மகன் தன்வீர் ஜாப்ரி உள்ளிட்டோரையும் போலீசார் சேர்த்திருந்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி தீஸ்டா மற்றும் அவரது கணவர் தாக்கல் செய்த மனுவை விசாரணை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து தீஸ்டாவும் அவரது கணவரும் முன் ஜாமீன் கோரி மாநில உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர். இதே வழக்கில் தீஸ்டாவையும் அவரது கணவரையும் மார்ச் 31-ந் தேதி வரை கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Teesta Setalvad, her husband Javed Anand and three others, who were rejected anticipatory bail by a Ahmedabad court on Tuesday in connection with an alleged funds embezzlement case of the 2002 Gujarat riot victims, might move the state high court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X