For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூருவில் 20ம் தேதி “மிட் நைட் மாரத்தான்” – ஏழைகளுக்கு நிதி திரட்ட ஒரு புது முயற்சி

Google Oneindia Tamil News

பெங்களூரு: உலக அளவில் பல்வேறு இடங்களில், பல்வேறு காலநிலைகளில் நடைபெறும் மாரத்தான் போட்டிளின் முக்கிய நோக்கமாக இருப்பது ஏழை எளியோருக்கு நிதி திரட்டுதல்தான்.

அந்த வகையில் வருகின்ற 20 ஆம் தேதியன்று பெங்களூருவில் நடைபெற இருக்கின்ற மிட்நைட் மாரத்தானும் விதிவிலக்கல்ல. நம்மைச் சுற்றி இருக்கும் பாமர மக்களுக்கு உதவுவதற்கான ஒரு தளத்தினை அமைத்துக் கொடுக்க இருக்கின்றது இந்த மிட்நைட் மாரத்தான்.

Fund rising “Mid night Marathon” in Bangalore…

இந்த நிகழ்வின் மூலமாக கிட்டதட்ட 15000க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதுடன் ஒரு நல்ல நோக்கத்திற்கான ஓட்டமாகவும் அது அமையும். மில்கா சிங் இந்த வருட ஓட்டத்தினை கொடி அசைத்து துவங்கி வைக்க உள்ளார். மேலும், மேரி கோம் இந்த வருட நிகழ்விற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்த மிட்நைட் மாரத்தானானது வருகின்ற 20 ஆம் தேதியன்று, இரவு 10 மணியளவில் துவங்குகின்றது. மேலும், பெண்களுக்கு இரவு 7.30 மணியளவில் தனியாக நடக்க உள்ளது. மரங்கள் நடுதல், குழந்தைகளின் கல்வி உட்பட பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்காக இந்த மாரத்தான் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு: www.midnightmarathon.in

English summary
World over marathons have been gaining immense importance as fund raising platforms, and Bengaluru Midnight Marathon (www.midnightmarathon.in) is no exception. It is the perfect opportunity to do your bit of charity for the communities around you. Running with one of the official charity groups is a great way to contribute to a worthy cause and have fun with your friends.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X