For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”ஜிலேபி ஓவர் டூ ஆப்பிள் ஜிலேபி” – நினைத்தாலே ”இனிக்கும்” இந்தியா!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் அனைவருக்குமே எதில் வேற்றுமை இருந்தாலும், இனிப்பு என்று வந்துவிட்டால் போதும், ஒரே குஷிதான்.

இன்னும் சொல்லபோனால் ஒரு காலத்தில் இந்தியாவிற்கு வருபவர்கள் எல்லாருமே "இனிப்புகளின் நிலம்" என்றுதான் அடைமொழியுடன் கூறியுள்ளார்கள் இந்தியாவை.

இந்த இனிப்புகளின் மேலான இந்தியர்களின் காதல் இன்று நேற்றல்ல புராணகாலத்தில் இருந்தே வழிவழியாக தொடர்ந்து வரும் ஒன்றாகும்.

Fusion Indian on the Dessert Menu

தெய்வங்களைக் கவர்ந்த இனிப்புகள்:

கிருஷ்ணரின் மக்கன் மிஸ்ரியும், பிள்ளையாரின் மோதகமும், பூந்தி லாடும், ஹல்வாவும் இன்றும் அவர்களின் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகின்றன. தெய்வச்சிலைகளைக் கூட இந்திய இனிப்புகள் அந்த அளவிற்கு கவர்ந்துள்ளன.

மேற்கு வங்க இனிப்புகள்:

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மறுமலர்ச்சியில், ஹல்வா மற்றும் மிட்டாய் கடைகள் இந்தியா முழுவதும், முக்கியமாக மேற்கு வங்காளத்தில் பரவிக் காணப்பட்டன.

இனிப்புகளின் ராஜா "பால்":

இந்திய இனிப்புகள் முக்கியமாக மென்மையான, பட்டுப்போல் மிருதுவான பாலினாலோ, இல்லை அதன் மற்ற சகோதர, சகோதரிகளான வெண்ணெய், கோவா, கிரீம் போன்ற பால் பொருட்களுடன் வெல்லமும், தேனும் கலந்து செய்யப்பட்டவையாகத்தான் இருக்கும்.

பாரம்பரியம் டூ மாடர்ன்:

முக்கியமாக பாரம்பரியத்தையும், காலத்தையும் குறிப்பிடுபவையாகத்தான் எல்லா இனிப்புகளும் அமைந்திருந்தன. ஆனால், இன்றைய மாடர்ன் இனிப்பு உலகத்தில், சமையல் வல்லுநர்கள் தங்களுடைய கற்பனை வளத்தையும் இனிப்புகளின் தயாரிப்பில் புகுத்தி வருகின்றனர்.

குல்பி எனும் மந்திரச்சொல்:

பாலும், கீரிமும் கலந்த "குல்பி" என்ற பாரம்பரிய இனிப்பானது தற்போது, புத்தம்புதிய பிளேவர்களான ரோஜா, மாதுளை, பாதாம், சாக்லேட் போன்ற பிளேவர்களில் எல்லாம் தயாரிக்கப்படுகின்றன. "பான் குல்பி" என்ற பெரிய குல்பியானது எல்லா இரவு நேர விருந்துகளிலும் தவராமல் இடம் பிடிக்கின்றது.

மாறும் சுவைகள்:

இந்நிலையில் இன்னும் மாடர்னாக கொய்யாப்பழம், காய்ந்த மாதுளை, காஜூ கத்லி, லஸ்ஸி என்றெல்லாம் விதவிதமான குல்பிகள் சாப்பாட்டு மேஜையை அலங்கரிக்கத் துவங்கியுள்ளன.

அசத்தும் ஆப்பிள் ஜிலேபி:

அடுத்தது ஜிலேபியில் புதுமை புகுத்தி ஆப்பிள் ஜிலேபிகள் வரத்தொடங்கின. ஜிலேபிபோல் வட்டமாக நறுக்கப்பட்ட ஆப்பிளை நெய்யில் பொறித்து, ரோஸ் சிரப்புடன் கூடிய பாகில் போட்டால் வாயும், வயிறும் இன்னும் கேட்குமாம்.

இஞ்சியில் கூட ஹல்வா:

காலாகந்த், பர்பி, சன்தேஸ் போன்ற பாரம்பரிய இனிப்புகள் கூட கிவி, கிரான்பெரி போன்ற பழங்களை உபயோகித்து புதுமையான இனிப்புகளாக மாற்றப்படுகின்றன. இஞ்சி, பைனாப்பிள் ஹல்வாக்கள் கூட அனைவரது மனதையும் கொள்ளை கொண்டு வருகின்றன.

வடக்கும், தெற்கும் இனிப்பில் சங்கமம்:

வடக்கும், தெற்கும் சங்கமிக்கும் வகையில், கலவையான இனிப்புகளையும் சமையல் நிபுணர்கள் தயாரித்து வருகின்றனர். மிட்டாய் சீஸ் கேக், குல்கந்து கப் கேக்ஸ், பிஸ்தாச்சியோ பன்னா கட்டாசேர் என்று சில் மாஸ்டர் பீஸ் ரெசிப்பிகளும் இரண்டு பகுதிகளின் கலவையாக தயாரிக்கப்படுகின்றன.

அத்திப்பழ பர்பியின் மேஜிக்:

அஞ்சிர் கி பர்பி என்றாலே சின்ன குழந்தைக்கு கூட நாக்கில் நீர் ஊறும்.அத்திப்பழமும் சேர்ந்த அந்த இனிப்பை சாப்பிட்டால் அவ்வளவுதான் சுவை அலாதிதான். தற்போது ஐஸ்கிரீம்களிலும், சீஸ்கேக்களிலும், மிட்டாய் மூஸ்களிலும் இந்த அத்திப்பழ பர்பி சேர்ந்து புதுமை படைத்து வருகின்றது.

அசத்தும் அறுசுவை இனிப்புகள்:

சோ சுவீட் இனிப்புகளான மினி குளோப் ஜாமூன், ரசமலாய், மால்புவாக்கள் கூட தற்போது புது வடிவங்களிலும், பிளேவர்களிலும் வரத்தொடங்கியுள்ளன.

நாக்கில் நடனாமடும் இனிப்புச்சுவை:

இதனால் என்னவென்றால் எவ்வளவு காலங்கள் ஆனாலும், இனிப்புகளின் வகைகள் வேண்டுமானால் மாறலாம். ஆனால், சுவை எல்லாருடைய நாக்கிலும் நடனமாடுகின்றது என்பதுதான் மாற்ற முடியாத உண்மை.

என்ன சுவீட் சாப்பிட வேகமாக கிளம்பிட்டீங்களா???

English summary
There's no getting around it, Indians have a (very) sweet tooth. In fact, the early visitors to India called it the land of sweets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X