For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனம் தளரவில்லை.. மாஸ் பிளான் போட்ட இஸ்ரோ.. அடுத்த வருடமே விண்வெளிக்கு ரோபோ.. ககன்யான் அப்டேட்!

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்கு முன்னோட்டமாக தற்போது இஸ்ரோ அடுத்த ஆண்டு இறுதியில் ரோபோ ஒன்றை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்கு முன்னோட்டமாக தற்போது இஸ்ரோ அடுத்த ஆண்டு இறுதியில் ரோபோ ஒன்றை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இஸ்ரோவின் சந்திரயான் 2 திட்டம் 99% வெற்றிபெற்ற நிலையில், விக்ரம் லேண்டர் மட்டும் நிலவில் இறங்காமல் தோல்வியை தழுவியது. நிலவிற்கு அருகே 2 கிமீ தூரம் வரை சென்று சந்திரயான் 2ன் லேண்டர் கடைசியில் தோல்வி அடைந்தது.

ஆனால் கொஞ்சமும் மனம் தளராத இஸ்ரோ தற்போது ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. இஸ்ரோ இப்போதே முக்கியமான பணிகளை தொடங்கி உள்ளது. இதற்கான மாஸ் திட்டங்களை இஸ்ரோ போட்டுள்ளது.

மைனஸ் 28.6 டிகிரி செல்ஸியஸை தொட்ட குளிர்.. காஷ்மீர், லடாக்கில் வரலாறு காணாத பனி.. ஜில் ஜில்! மைனஸ் 28.6 டிகிரி செல்ஸியஸை தொட்ட குளிர்.. காஷ்மீர், லடாக்கில் வரலாறு காணாத பனி.. ஜில் ஜில்!

இஸ்ரோ திட்டம்

இஸ்ரோ திட்டம்

மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ முடிவெடுத்து உள்ள .இஸ்ரோவின் இந்த திட்டத்திற்கு ககன்யான் திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் விண்வெளியில் சென்று முதன்முறையாக இஸ்ரோ அனுப்பும் இந்திய வீரர்கள் மூலம் ஆராய்ச்சி நடத்தப்படும்.

எப்படி செய்வார்கள்

எப்படி செய்வார்கள்

ஆனால் விண்ணில் எங்கு சென்று ஆராய்ச்சி செய்வார்கள் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. இதன் மூலம் இந்தியா முதன்முதலாக மனிதர்களை சுயமாக விண்ணுக்கு அனுப்ப உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 3 பேரை விண்ணுக்கு அனுப்ப மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் மூலம் 3 பேர் ஏழு நாட்கள் விண்ணில் இருப்பார்கள்.

என்ன ஆராய்ச்சி

என்ன ஆராய்ச்சி

இதற்கான தேர்வுதான் தற்போது பெங்களூரில் நடந்து வருகிறது. இதில் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு அதன்பின் ரஷ்யாவில் முழுமையாக பயிற்சி அளிக்கப்படுவார்கள். அதன்பின் இவர்கள் விண்ணுக்கு அனுப்பப்படுவார்கள்.

எத்தனை நாட்கள்

எத்தனை நாட்கள்

ரஷ்யாவில் லியாசான் பயிற்சி மையத்தில் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். ஏழு நாட்கள் அவர்கள் விண்ணில் ஆராய்ச்சி செய்ய இருக்கிறார்கள். யாரை விண்ணுக்கு அனுப்ப போகிறார்கள் என்பதை குறித்து இவர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. இதற்கு முன்னோட்டம் பார்க்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

திட்டம் என்ன

திட்டம் என்ன

அதன்படி ககன்யான் திட்டத்திற்கு முன்னோட்டமாக தற்போது இஸ்ரோ அடுத்த ஆண்டு இறுதியில் ரோபோ ஒன்றை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. ரோபோ ஒன்றை விண்ணுக்கு அனுப்பி அதை அங்கு இரண்டு நாட்கள் இருக்க வைத்து மீண்டும் பூமிக்கு கொண்டு வர இருக்கிறார்கள். ஆனால் இந்த ரோபோ குறித்த விவரம் முழுதாக வெளியாகவில்லை.

Recommended Video

    Who Is Sirisha Bandla ? | விண்வெளிக்கு பறக்கும் இந்திய பெண்மணி
    செம பிளான்

    செம பிளான்

    அது எப்படி செல்கிறது, பாதிப்பு எதுவும் ஏற்படுகிறதா என்று எல்லாம் ஆராய்ச்சி செய்ய உள்ளனர். அந்த ரோபோ சரியாக திரும்பி வந்தால் ஒரே வருடத்தில் மனிதர்களை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளது. 2020 இறுதியில் இந்த ரோபோவை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Mission Gaganyaan: ISRO plans to send a robot as a test mission before sending an Astronaut to space.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X