For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2014-ல் கங்கையின் மகன்.. தற்போது ரஃபேல் ஏஜென்ட்.. மோடியை சரமாரியாக விமர்சித்த சித்து

Google Oneindia Tamil News

பிலாஸ்பூர்: 2014-ம் ஆண்டு தேர்தலின் போது தன்னை கங்கையின் மகனாக கூறிக்கொண்ட மோடி, தற்போது 2019-ல் ரஃபேல் ஏஜென்ட்டாக செல்ல போகிறார் என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான நவ்ஜோத் சிங் சித்து கடுமையாக சாடியுள்ளார்.

இமாச்சலபிரதேச மாநிலத்தில் பிலாஸ்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளரான சித்து, பிரதமர் மோடியிடம் தாம் ஒன்றை கேட்க விரும்புவதாக கூறினார். ரஃபேல் ஒப்பந்தத்தில் கமிஷன் வாங்கினீர்களா இல்லையா என்பதே அது என்றார்.

Gangas son in 2014. Currently Rafael agent.. Navjot Singh Sidhu criticized Modi

இந்த கேள்வி தொடர்பாக நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் விவாதம் நடத்த நான் தயாராக உள்ளேன். மோடி தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார் சித்து,

மேலும் பேசிய அவர், எங்கள் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உங்களை போல் அல்ல. அவர் மிகச்சிறந்தவர், ஒரு பெரிய பீரங்கி போன்றவர். நான் ஒரு ஏகே-47 துப்பாக்கியை போன்றவன் என்று பேசினார்.

வருடா வருடம் குறிப்பிட்ட நாளில் தவறாமல் சந்திக்கும் ரஜினி, பொன்ராஜ்.. ரகசியம் என்னவோ! வருடா வருடம் குறிப்பிட்ட நாளில் தவறாமல் சந்திக்கும் ரஜினி, பொன்ராஜ்.. ரகசியம் என்னவோ!

நானும் ஊழல் செய்ய மாட்டேன், மற்றவர்களையும் ஊழலை செய்ய அனுமதிக்க மாட்டேன் என முழங்கினீர்களே. தற்போது இந்த வாக்கியத்தை வைத்து விவாதம் நடத்துவோம் வருகிறீர்களா என மோடிக்கு சவால் விடுத்துள்ளார். ஒருவேளை நான் இந்த விவாதத்தில் தோற்றால் அரசியலை விட்டே விலக தயாராக உள்ளேன் என்றார் சித்து.

இமாச்சலபிரதேசத்தில் 4 தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது இதனையடுத்து காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Navejot Singh Sidhu, one of the Congress leaders, has said that Modi, who was the son of Ganga during the 2014 elections, is now going to be a Rafael agent in 2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X