For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிக பாதிப்பை சந்தித்த கஞ்சம் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்த ஒடிசா அரசு

Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: நாட்டிலேயே கோவிட் -19 கட்டுப்பாட்டு நிர்வாகத் திறனின் முன்மாதிரியாக இருப்பது, ஒடிசாவின், கஞ்சம் மாவட்டம் என்று முதல்வர் நவீன் பட்நாயக் புகழாரம் தெரிவித்தார்.

கஞ்சம் மாவட்டத்தின் சர்பஞ்ச்களுடன் (கிராமத் தலைவர்கள்) கோவிட் நிலைமையை இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆய்வு செய்த முதல்வர், ஒடிசாவில் மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் ஒன்றான இம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் கட்டுக்குள் வந்திருப்பதாக தனது திருப்தியை தெரிவித்தார்.

Ganjam Will Be Role Model of COVID Management, Says CM Naveen Patnaik

இம்மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள சுகாதார கட்டமைப்பு வசதிகள் குறித்து அப்போது நவீன் பட்நாயக் பேசினார். கலெக்டர்களுக்கான அதிகாரத்தை, மாவட்ட சர்பன்ச்களுக்கு நவீன் பட்நாயக் வழங்கியுள்ளார். எனவே அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது இவர்களுடன் முதல்வரே நேரில் ஆலோசனை நடத்துவதால், கொரோனா பரவல் தடுப்பு பணிகள் வேகமாக நடைபெறுகிறது.

கிராம பஞ்சாயத்து அளவில் கொரோனா நோய் பரவல் தடுப்பு சிறப்பாக முன்னேற காரணம், சர்பஞ்களுக்கு கலெக்டர்களுக்கு இணையான அதிகாரம் கொடுத்ததுதான். மேலும், அவர்களை இக்கூட்டத்தின்போது முதல்வர் பாராட்ட தயங்கவில்லை.

காரில் ஏசி கூடாது.. 1+2-வுக்கு மேல் நாட் அலவ்டு.. ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கான நெறிமுறைகள் வெளியீடுகாரில் ஏசி கூடாது.. 1+2-வுக்கு மேல் நாட் அலவ்டு.. ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கான நெறிமுறைகள் வெளியீடு

கடந்த சில நாட்களாக, கஞ்சம் மாவட்டத்தில், கொரோனா நோய் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. 200க்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்படும் நிலையில், தற்போது மீட்பு விகிதம், 10,000 அளவை தாண்டியுள்ளது.

டெஸ்ட்டிங். டிரேசிங் மற்றும் சிகிச்சை ஆகிய நடைமுறைகளை, ஒடிசா அரசு சிறப்பாக கையாண்டதால், கஞ்சம் மாவட்டம், பெருமளவுக்கு கொரோனா தொற்றிலிருந்து விடுதலை பெற்றுள்ளது.

English summary
Ganjam district will be a role model of COVID-19 management in the country, said Chief Minister Naveen Patnaik on Monday. Reviewing the COVID situation with Sarpanches of Ganjam district through video conferencing today, the Chief Minister expressed his satisfaction over the management of coronavirus pandemic in the district, which is one of the worst effected districts in Odisha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X