For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனத்துறை ஊழியரை 'சுளீர்' என அறைந்த மத்திய அமைச்சர் மேனகா காந்தி- போலீசில் பரபர புகார்!!

By Mathi
Google Oneindia Tamil News

பரேலி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் வனத்துறை ஊழியரை மத்திய அமைச்சர் மேனகா காந்தி அறைந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தாக்கப்பட்ட வனத்துறை ஊழியர் போலீசிலும் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தில் பரேலியில் அரசின் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கடந்த வார இறுதியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி பரேலிக்கு வந்திருந்தார்.

Gateman alleges assault by Menaka Gandhi

அப்போது அவருடைய லோக்சபா தொகுதியான பிலிபித் அருகே வந்தபோது அங்கு காட்டுத் தீ ஏற்பட்டிருப்பதைக் கண்டார். அதைத் தொடர்ந்து மகேஷ் சந்த் மற்றும் ரூப்லால் ஆகிய இரு வனத்துறை அதிகாரிகளை அவர் அழைத்து விசாரித்தார்.

ஆனால் அவர்கள் இருவரும் காட்டுத் தீ எதுவும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மேனகா காந்தி ரூப்லாலை அறைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ரூப்லால் பரேலியில் உள்ள கஜ்ரவுலா போலீஸ் நிலையத்தில் மேனகா காந்தி மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம் என்று அந்த காவல் நிலையத்தின் ஆய்வாளர் அசோக் குமார் புத்தாபிரியே கூறியுள்ளார்.

English summary
A gateman posted at the barrier to the Pilibhit Tiger Reserve (PTR) to check that all the produce taken out has the requisite clearance, has complained to the police that Union minister for women and child welfare Maneka Gandhi slapped and kicked him as she stopped by on her way to Puranpur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X