For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால் தற்கொலை செய்வேன்.. கவுரி லங்கேஷ் கொலைகாரன் மிரட்டல்

கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் கைது செய்யப்பட்டுள்ள கே டி நவீன் குமார், தன்னை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தினால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ள

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கவுரி லங்கேஷ் போல மற்றொரு எழுத்தாளரையும் கொலை செய்ய திட்டம்- வீடியோ

    பெங்களூர்: கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் கைது செய்யப்பட்டுள்ள கே டி நவீன் குமார், தன்னை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தினால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளான்.

    கர்நாடகாவில் ''பத்திரிக்கா" என்ற பெயரில் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார் பிரபல பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ். தனது பத்திரிக்கையில் வலது சாரிகள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ், பாஜக குறித்தும் அடிக்கடி கட்டுரைகள் எழுதி வந்தார்.

    Gauri Lankesh murder: Now accused refuses to undergo narco test

    இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் இந்து யுவ சேனா அமைப்பை சேர்ந்த முக்கியமான நிர்வாகியான கே டி நவீன் குமார் கைது செய்யப்பட்டார்.

    ஏற்கனவே கே டி நவீன் குமார் தன்னுடைய கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார். கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர் விசாரிக்கப்பட்டார். எப்படி இந்த கொலை சம்பவம் நடந்தது என்று ஒவ்வொரு விவரமாக அவர் தெரிவித்தார்.

    இதை ஆதாரமாக கொடுக்கும் பொருட்டு, அவர் மீது உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கேட்கப்பட்டது. கே டி நவீன் குமாரும் அதற்கு ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் இந்த மாதம் 16ம் தேதிக்குள், 30ம் தேதி வரை இதற்கு அவகாசம் அளிக்கப்பட்டது.

    ஆனால் தற்போது கே டி நவீன் குமார் உண்மை கண்டறியும் சோதனை நடத்த கூடாது என்று மாற்றி பேசி இருக்கிறான். அப்படி உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால், தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளான். இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் போலீஸ் இதில் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி உள்ளது.

    உண்மை கண்டறியும் சோதனையை, ஒரு நபரின் அனுமதி இன்றி அவர் மீது நடத்த முடியாது என்பதால், போலீஸ் மீண்டும் நீதிமன்றம் செல்ல வேண்டி இருக்கும். நவீன் குமாரின் இந்த திடீர் மனமாற்றத்திற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை.

    English summary
    The sole suspect arrested in connection with the Gauri Lankesh murder case has refused to undergo a narco-analysis test. The accused, K T Naveen Kumar had earlier told a sessions court that he was willing to undergo the test, but later backed out.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X