For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரிட்டன் விருது பெறுகிறார் கவுரி லங்கேஷ்... இறந்த பின்பும் வாழும் எழுத்து!

சில நாட்களுக்கு முன் கர்நாடகாவில் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் இந்த ஆண்டுக்கான 'அன்னா பொலிகோவஸ்கயா' விருதுக்கு பிரிட்டனால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெங்களூர்: சில நாட்களுக்கு முன் பெங்களூரில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ். இவரது மரணம் இந்தியா முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இவர் தற்போது 'அன்னா பொலிகோவஸ்கயா' விருதுக்கு பிரிட்டனால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது அந்த நாட்டின் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றாகும்.

"லங்கேஷ் பத்திரிக்கா" என்ற இதழை நடத்தி வந்த கவுரி லங்கேஷ் சில நாட்களுக்கு முன் மரம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டு ஒருமாதம் ஆகியும் இன்னும் கொலையாளி யார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

Gauri lankesh selected for an award... Honoured by Britain !

இவரது மர்ம குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார் பிரதமர் மோடி. கொலை செய்யப்பட கவுரி லங்கேஷ் பாஜக கட்சி குறித்தும், ஆர்.எஸ்.எஸ்.எஸ் இயக்கம் குறித்தும் , அவர்களை எதிர்த்தும் நிறைய கட்டுரைகளை எழுதியுள்ளார். இந்தக் கொலைக்கு எதிராக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருக்கும் புகழ்பெற்ற அமைப்பான 'ரா இன் வார்' என்ற தனியார் தொண்டு அமைப்பு , காவிரி லங்கேஷிற்கு " அன்னா பொலிகோவஸ்கயா" என்ற விருது வழங்கி சிறப்பித்துள்ளது. பெரும்பாலும் இந்த விருது பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைக்காக போராடும்
பத்திரிக்கையாளர்கள், போராளிகளுக்கு வழங்கப்படுவது வழக்கம்.

இதுகுறித்து பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் உறவினர்கள், செய்தியாளர்களிடம் பேசியபோது " பிரிட்டனில் வழங்கப்படும் இந்த அன்னா பொலிகோவஸ்கயா விருதுக்கு கவுரி லங்கேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை பெறுவதற்கு அவர் இல்லாமல் போனது வருத்தத்தை ஏற்படுத்துகிறது " என்றார்.

கவரி லங்கேஷுக்கு வழங்கப்படும் இந்த விருது பாகிஸ்தான் போராளி குலாலாய் இஸ்மாயில் உடன் பகிர்ந்து அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது ரஷ்யாவில் 2006ல் கொல்லப்பட்ட பெண் பத்திரிகையாளர், அன்னா பொலிகோவஸ்கயா நினைவாக வருடாவருடம் வழங்கப்படுகிறது.

English summary
Slain woman Journaliast Gowri Lankesh has been selected for an award from London. She will be honoured With Anna Politkovskaya Award. Raw in War, an NGO will give the award.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X