For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்களோட இயற்கையான உணர்ச்சிங்க இது.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் ஓரின சேர்க்கையாளர்கள் அதிருப்தி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஒரினச் சேர்க்கை சட்டவிரோதமானது என்ற தீர்ப்பு அளித்திருப்பது தங்களுக்கு அதிருப்தி அளிக்கிறது என்று ஓரினச் சேர்க்கையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஓரினச் சேர்க்கை சட்டப்பூர்வமானது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஆதரவாக, எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டன.

இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஓரினச்சேர்க்கையாளர்கள் தரப்பு வழக்கறிஞர், சட்டப்படி இந்த தீர்ப்பு சரியானது அல்ல. இது தொடர்பாக அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை மேற்கொள்வோம் என்றார்.

மேலும் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே பேசிய ஓரின சேர்க்கையாளர்கள் சிலர், இது எங்களது இயற்கையான உணர்ச்சி. எங்களது வாழும் உரிமையை பாதிக்கக் கூடியதாக இத்தீர்ப்பு இருக்கிறது என்றனர்.

English summary
The NGO, which was the first to file the petition for decriminalising section 377 of IPC, on Wednesday expressed dissatisfaction over the Supreme Court judgement upholding the constitutional validity of the penal provision making gay sex a punishable offence
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X