For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன செய்தும் பலனளிக்கவில்லை.. மிக மோசமான நிலையில் இந்திய பொருளாதாரம்.. மத்திய அரசு குழப்பம்!

இந்திய பொருளாதார மந்த நிலையை சரி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட சீர் திருத்த நடவடிக்கை எதுவும் பலன் அளிக்கவில்லை என்பது நடப்பு காலாண்டின் ஜிடிபி மூலம் தெரிய வந்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய பொருளாதார மந்த நிலையை சரி செய்வதற்காக மத்திய அரசு மூலம் கொண்டு வரப்பட்ட சீர் திருத்த நடவடிக்கை எதுவும் பலன் அளிக்கவில்லை என்பது நடப்பு காலாண்டின் ஜிடிபி மூலம் தெரிய வந்துள்ளது.

எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில்தான் தற்போது மத்திய பாஜக அரசு இருக்கிறது. மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றதில் இருந்தே இந்தியாவின் நிதி நிலைமை மிக மோசமாக இருக்கிறது.

அதற்கு முன்பே அருண் ஜெட்லி காலத்திலேயே நிதி நிலைமை மோசம் அடைந்து வந்தது. தற்போது கடந்த ஒரு வருடமாக நிதி நிலைமை மிக மோசமாக இருந்தது.

8 தொழிற்துறைகளின் வளர்ச்சி மொத்தமாக காலி.. ஜிடிபி சரிவோடு மத்திய அரசு கொடுத்த ஷாக் செய்தி! 8 தொழிற்துறைகளின் வளர்ச்சி மொத்தமாக காலி.. ஜிடிபி சரிவோடு மத்திய அரசு கொடுத்த ஷாக் செய்தி!

ஜிடிபி என்ன

ஜிடிபி என்ன

இந்த நிலையில்தான் தற்போது ஜிடிபி வெளியாகி உள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் நினைக்க முடியாத அளவிற்கு சரிவை சந்தித்து வருகிறது. நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஆகும் இது.

என்ன நடவடிக்கை

என்ன நடவடிக்கை

இந்தியாவின் இந்த பொருளாதார சீர்கேடு காரணமாக ஆட்டோமொபைல் துறை, தொழிற்துறை என பல துறைகளில் பணியாற்றி வந்த பணியாளர்கள் வேலையை இழந்தனர். தினமும் பல்லாயிரக்கணக்கில் பலர் வேலையை இழந்தனர். இதனால் ஐடி துறையும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.

என்ன செய்தது

என்ன செய்தது

இந்த பொருளாதார சீர்கேட்டை சரி செய்ய மத்திய பாஜக அரசு நிறைய திட்டங்களை அறிவிப்புகளை வெளியிட்டது. மிக முக்கியமாக ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மாற்றம் செய்தது. ஜிஎஸ்டியில் பெரிய அளவில் வரி குறைப்பு செய்யப்பட்டது. ஆனால் கண்கெட்ட பிறகு சூரிய உதயம் என்பது போல ஜிஎஸ்டி வரி விகிதத்தில் செய்த சீர் திருத்தம் எதுவும் உதவவில்லை.

இன்னொரு பக்கம்

இன்னொரு பக்கம்

அதேபோல் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், கார்ப்பரேட் நிறுவனங்களில் பணி நீக்கத்தை குறைக்கும் வகையிலும் கார்ப்பரேட் வரியை மத்திய பாஜக அரசு குறைத்தது. ஆனால் இதுவும் கார்ப்பரேட் பணி நீக்கத்தில் எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

கோர் எப்படி

கோர் எப்படி

இதெல்லாம் போக மூல தன ஆதாய நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு மூல தன ஆதாய வரியைக் குறைத்தது. ஆனால் மூல தன ஆதாய உற்பத்தி இதனால் முன்னேற்றம் அடையாமல் மேலும் சுருக்கம் அடைந்துள்ளது. அதன்படி நடப்பு நிதி ஆண்டின் 2வது காலாண்டில் இந்தியாவில் 8 ஆதார உற்பத்தி தொழிற்துறைகளின் வளர்ச்சி மொத்தமாக சரிந்துள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மொத்தம் இதன் வளர்ச்சி 5.8% குறைந்துள்ளது.

கடைசி எப்படி

கடைசி எப்படி

அதேபோல் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், அந்த துறையிலும் வரி குறைக்கப்பட்டது. ஆனால் இதனால் வருவாய் மேலும் 2.75 லட்சம் கோடி ரூபாய் சரிந்து மத்திய அரசுக்கு மேலும் நஷ்டம் ஏற்பட்டது. இப்படி சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று செய்யப்பட்ட நடவடிக்கை எல்லாம் இந்தியாவின் பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கி உள்ளது.

English summary
GDP: Economic reform actions from the Center Government played no impact on the growth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X