For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பணமதிப்பிழப்பு எதிரொலி: மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5.7% ஆக சரிவு!

பணமதிப்பிழப்பு எதிரொலியால் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.7% ஆக சரிந்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பணமதிப்பிழப்பு எதிரொலியால் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி என்பது 5.7% ஆக சரிந்துள்ளது கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் திடீர் அறிவிப்பின் பாதிப்பில் இருந்து இருந்து நாடு இன்னமும் மீளவில்லை. அனைத்து துறைகளிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான அண்மைய ரிசர்வ் வங்கி அறிக்கையும் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பணமதிப்பிழப்பு தொடர்பான ரிசர்வ் வங்கியின் செயல்பாடு வெட்கக் கேடானது என சாடியிருந்தார்.

ஜிடிபி சரிவு

ஜிடிபி சரிவு

இந்த நிலையில் நடப்பு முதலாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஜிடிபி 5.7% ஆக சரிவை சந்தித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால்தான் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

0.4% சரிவு

0.4% சரிவு

இதற்கு முந்தைய காலாண்டில் ஜிடிபியானது 6.1% ஆக இருந்தது. முந்தைய காலாண்டை ஒப்பிடுகையில் 0.4% சரிவு ஏற்பட்டுள்ளது.

ஜிடிபி 7.19% ஆக இருந்தது

ஜிடிபி 7.19% ஆக இருந்தது

அதேநேரத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ஜிடிபி முதல் முறையாக சரிவை சந்தித்துள்ளது. 2016-17 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் ஜிடிபியானது 7.9% ஆக இருந்தது.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

தற்போது ஜிடிபி சரிந்துள்ளதும் மத்திய அரசை கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பொருளாதார வல்லுநர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

English summary
GDP growth fell to a three-year low of 5.7 per cent in the April-June quarter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X