For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணுவம் வெளியேற பேரணி.. காஷ்மீர் பிரிவினைவாதி கிலானி 'முறைப்படி' கைது

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: காஷ்மீர் பிரிவினைவாதி சையது அலி ஷா கிலானி கைது செய்யப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் இருந்து ராணுவத்தை வெளியேற கூறி பேரணி நடத்தியதை தொடர்ந்து அவர் 'முறைப்படி' கைது செய்யப்பட்டார்.

காஷ்மீரில் வன்முறை வெடித்துள்ள நிலையில், பிரிவினைவாதி கிலானி கடந்த 2 நாட்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இருப்பினும், தடையை மீறி, தலைநகர், ஸ்ரீநகரிலுள்ள பதாமி பாக், ராணுவ முகாமை நோக்கி நேற்று பேரணி சென்றார், கிலானி. இந்திய ராணுவத்தை காஷ்மீரை விட்டு வெளியேற அவர் கோரிக்கைவிடுத்தார்.

Geelani arrested after telling army to vacate Jammu and Kashmir

முன்னதாக ராணுவத்தை வெளியேற கோரி, இவர் திறந்த மடல் எழுதியிருந்தார். இந்த கடிதத்தை இந்திய ராணுவம், ஆயுதப்படை, கடற்படை, எல்லையோர பாதுகாப்பு படை, சிஆர்பிஎஸ், ஐடிபிபி மற்றும் சிஐஎஸ்எப் ஆகியவற்றுக்கு அனுப்பிவிடுங்கள் எனவும் அவர் கூறியிருந்தார்.

கிலானி பேரணியால் ஸ்ரீநகரில் நேற்று பதற்றம் நிலவியது. சாலைகள் அடைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Kashmir separatist Syed Ali Shah who had asked the army to vacate from Jammu and Kashmir has formally arrested. Geelani was under house arrest since the past two days was arrested after he tried to defy the same and lead a march to the 15 corps of the Indian Army at Badami Bagh, Srinagar and ask them to vacate Jammu and Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X