For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உத்தரப்பிரதேசம்... பைக்கில் செல்ல செல்ல சுடப்பட்ட பத்திரிக்கையாளர் உயிரிழப்பு!!

Google Oneindia Tamil News

காசியாபாத்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கடந்த 20 ஆம் தேதி சுடப்பட்ட பத்திரிக்கையாளர் விக்ரம் ஜோஷி பரிதாபமாக இன்று உயிரிழந்தார். துப்பாக்கியால் சுடப்பட்டதில் அவரது தலையின் நரம்பு பெரிய அளவில் பாதிக்கப்பட்டதில் அவரை காப்பாற்ற முடியாமல் போனது என்று மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபத்தில் இருக்கும் விஜய் நகரைச் சேர்ந்தவர் விக்ரம் ஜோஷி. இவர் ஜன் சாகர் டுடே என்ற பத்திரிகையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 20ஆம் தேதி தனது மகள்களை பைக்கில் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கியால் இவரை சுட்டுள்ளனர்.

Ghaziabad: Journalist Vikram Joshi passed away today

அங்கு இருக்கும் சிசிடிவி கேமராவில் இது பதிவாகி இருக்கிறது. பைக்கில் சென்று கொண்டு இருக்கும்போது அதிரடியாக நுழையும் நபர்கள் அவரை துப்பாக்கியால் சுடுகின்றனர். இதில் தடுமாறி கீழே விழுகிறார். பைக் சாய்ந்தவுடன் அதில் அமர்ந்து இருந்த அவரது இரண்டு மகள்களும் தப்பி ஓடுகின்றனர்.

இதுதொடர்பாக இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஏன் விக்ரம் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து இன்னும் சரியாக தெரிய வரவில்லை. அவரது உறவினர் பெண்ணுக்கு தொடர்ந்து சில நபர்கள் தொல்லை கொடுத்து வந்ததாகவும் அவர்கள் மீது போலீசில் விக்ரம் புகார் கொடுத்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இவர் கொடுத்த புகாரின் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரி ராகவேந்திரா தற்போது பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நடவடிக்கை எடுக்கத் தவறிய போலீஸ் அதிகாரிகள் குறித்த விசாரணை அறிக்கை உயர் போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ.1000.. எப்போது கிடைக்கும்.. சீரம் நிறுவன சிஇஒ பேட்டி கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ.1000.. எப்போது கிடைக்கும்.. சீரம் நிறுவன சிஇஒ பேட்டி

விக்ரம் மரணம் குறித்து அவரது உறவினர் கூறுகையில், ''எனது சகோதரியை சிலர் தொடர்ந்து கிண்டல் செய்து வந்தனர். அன்று அவளுடைய பிறந்த நாள் கூட. அவர்கள் மீது விக்ரம் புகார் கொடுத்து இருந்தார். எனது சகோதரியுடன் வீட்டுக்கு வரும்போது அவர் சுடப்பட்டார். கமல் உத் தின் என்பவரின் மகன் தான் விக்ரமை சுட்டது. அவரை கைது செய்யும் வரை நாங்கள் விக்ரமின் உடலை வாங்கப் போவதில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

English summary
Ghaziabad: Journalist Vikram Joshi passed away today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X