For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

133 ஆண்டுகளாக "கம்பெனிக்கு" ஆள் தேடும் பேய்... அரசு பங்களா மர்மம் குறித்து பெண் ஆட்சியர் பகீர்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    அரசு பங்களா மர்மம் குறித்து பெண் ஆட்சியர் பகீர்- வீடியோ

    வாரங்கல்: ஆந்திர மாநிலத்தில் வாரங்கல்லில் உள்ள அரசு பங்களாவில் முதல் மாடியில் பேய்கள் குடியிருப்பதாக பெண் ஆட்சியர் பகீர் புகாரை தெரிவித்துள்ளார்.

    வாரங்கல் ஆட்சியராக உள்ளவர் அமராபாலி கடா. இவருக்கு மாவட்ட நிர்வாகத்தால் அரசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு அவர் வசித்து வருகிறார்.

    தான் வசித்து வரும் பங்களாவில் நடைபெறும் இன்ட்ரஸ்டிக்கான விஷயங்களை அவர் ஒரு வெப் சேனலில் பகிர்ந்துள்ளார். அதில் தனக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவில் பேய் இருப்பதாக கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஜார்ஜ் பால்மெர்

    ஜார்ஜ் பால்மெர்

    அமராபாலி கடாவுக்கு ஒதுக்கப்பட்ட பங்களா நிஜாம் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். அதாவது 133 ஆண்டுகள் பழமையானது. இந்த கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டியவர் கண்காணிப்பு பொறியாளராக நியமிக்கப்பட்ட ஜார்ஜ் பால்மெர் மனைவி ஆகும்.

    விரிசல்

    விரிசல்

    நிஜாம் ஆட்சி காலத்தில் கரீம்நகர், கம்மம் மற்றும் வாரங்கல் ஆகிய மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் கட்டப்படும் கட்டடங்களுக்கு பொறுப்பாளராக இருந்தார் பால்மெர். 130 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட இந்த அரசு பங்களா விரிசல் அடைய தொடங்கிவிட்டது.

    பேய்கள் வசிப்பது

    பேய்கள் வசிப்பது

    20 அடி உயரமான அறையில் சேதமடைந்ததால் மழை பெய்தால் பங்களாவில் ஒழுகும். இந்த பங்களாவை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து அமராபாலி கடா கூறுகையில் இங்கு எனக்கு முன்னாள் குடியிருந்த அதிகாரிகள் பேய்கள் வசிப்பது குறித்து என்னிடம் கூறினர்.

    துணை தேடுகிறது

    துணை தேடுகிறது

    மேலும் முதல் மாடியில் தூங்க வேண்டாம் என்றும் அங்கு பேய் உள்ளதால் அதை ஸ்டோர் ரூமாக மாற்றிக் கொள்ளுமாறும் எனக்கு அறிவுறுத்தியிருந்தனர். நான் குடிவருவதற்கு முன்பே இங்குள்ள முதல் மாடி சுத்தம் செய்யப்பட்டுவிட்டது. எனினும் 133 ஆண்டுகளாக வசிக்கும் பேய் தனக்கென துணையை தேடுவதால் முதல் தளத்தில் தூங்குவதற்கு எனக்கு பயமாக உள்ளது என்றார்.

    English summary
    Amrapali Kata, the Urban Collector of Warangal in Telangana recently told that there was a ghost at the government bungalow allotted to her by the district administration.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X