For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மர்மமாக செத்து மடியும் காட்டு ராஜா.. 20 நாளில் 21 சிங்கங்கள் மரணம்.. கிர் காடுகளில் என்ன நடக்கிறது!

குஜராத்தின் கிர் காட்டில் தொடர்ந்து சிங்கங்கள் மர்மமாக இறந்து வருகிறது.

Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத்தின் கிர் காட்டில் தொடர்ந்து சிங்கங்கள் மர்மமாக இறந்து வருகிறது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத்தில் உள்ள கிர் காட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 12-13ம் தேதிகளில் ஒரே இடத்தில் 12 சிங்கங்கள் இறந்து கிடந்தது. மொத்தமாக சில மீட்டர் தூரத்தில் இந்த சிங்கங்கள் இறந்து கிடந்தது.

அதை சோதனை செய்த போது எதற்காக இப்படி ஒரே நேரத்தில் இத்தனை சிங்கங்கள் இறந்து போனது என்று தெரியாமல் வனத்துறையினர் தவித்தனர். இதனால் காடு முழுக்க பாதுகாப்பு பணி அதிகரிக்கப்பட்டது.

என்ன நினைத்தார்கள்

என்ன நினைத்தார்கள்

இந்த சிங்கங்களின் மரணத்திற்கு முதலில், சண்டைதான் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. சிங்கங்கள் தங்களுக்குள் இட்டுக்கொண்ட சண்டை காரணமாக இப்படி இறந்து போய் இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் எந்த சிங்கத்தின் உடலிலும் பெரிய காயங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

[பல்லாயிரம் கோடி.. வாட்ஸ் ஆப் போட்டோவை வைத்து இயங்கும் போதை பொருள் கும்பல்.. நூதன கொள்ளை! ]

தொடரும் மரணம்

இந்த நிலையில் அடுத்த நான்கு நாட்களில் இன்னும் மூன்று சிங்கங்கள் இப்படி இறந்து கிடைத்தது. இதன்பின் குஜராத் வனத்துறையினர் இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ள தொடங்கினார்கள். ஆனால் என்ன செய்தும் அடுத்தடுத்து மரணம் நிகழ ஆரம்பித்தது. ஒரே நாளில் மருத்துவமனையில் 5 சிங்கங்கள் நான்கு நாட்களுக்கு முன் இறந்தது.நேற்று இறந்த சிங்கத்தோடு மொத்தம் 21 சிங்கங்கள் இறந்து இருக்கிறது இதுவரை.

காரணம் என்னவாக இருக்கலாம்

காரணம் என்னவாக இருக்கலாம்

இதற்கு என்ன காரணம் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சிங்கங்களுக்கு ஏதாவது வைரஸ் தாக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ''புரோட்டோசோயா இன்பெக்ஷன்'' எனப்படும் பூச்சிகள் மூலம் பரவக்கூடிய நோய் இதற்கு ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பெரிய குழப்பம்

பெரிய குழப்பம்

அவர்கள் நினைத்தது போலவே 21ல் 11 சிங்கங்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் மீதி சிங்கங்களுக்கு அப்படி எந்த பாதிப்பும் இல்லை. அதனால் இந்த சிங்கங்கள் எப்படி இறந்து இருக்கும் என்று பெரிய குழப்பத்தில் சிக்கி உள்ளது குஜராத் வனத்துறை.

English summary
Gir Forest lion death: Toll increases to 21 as 2 lions died yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X