For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊரை விட்டு ஒதுக்கி வச்சுட்டாங்க.. கல்லூரி மாணவி பேஸ்புக் லைவ்வில் தற்கொலை முயற்சி

Google Oneindia Tamil News

பெங்களூர்: தங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டார்கள் என்பதற்காக கல்லூரி மாணவி ஒருவர் பேஸ்புக் லைவ்வில் தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயாப்புரா மாவட்டம் ஹன்சினாலா தண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் லதா (18). இவர் நேற்று தனது முகநூல் பக்கத்தில் லைவ் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

[காந்தியே "இவர்" ஆட்சியைதான் விரும்பியிருப்பார்.. காந்தியின் செயலாளர் பரபரப்பு தகவல்கள்!]

எந்த நடவடிக்கை

எந்த நடவடிக்கை

அதில் பேசிய அவர் நிலப்பிரச்சினை தொடர்பாக எங்கள் குடும்பத்தை கிராமத்தை விட்டு 5 ஆண்டுகள் ஒதுக்கி வைத்துவிட்டார்கள். இதுகுறித்து ஆட்சியர், எஸ்பி ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நிலப்பிரச்சினை தீரவில்லை

நிலப்பிரச்சினை தீரவில்லை

பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோருக்கும் புகார் அளிக்க தவறவில்லை. தற்போதைய எம்எல்ஏ எம்பி பாட்டீலை குடும்பத்துடன் சந்தித்து முறையிட்டோம். எனினும் நிலப்பிரச்சினை தீரவில்லை.

உரிமை இல்லையா

உரிமை இல்லையா

இதனால் கல்லூரியில் படிக்கும் எனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டது. படிப்பும் தடைப்பட்டது. எனது தம்பியின் படிப்பும் பாதிக்கப்பட்டது. மோடி அவர்களே, உங்களை கைகூப்பி ஒரு கோரிக்கை வைக்கிறேன். நானும் உங்களுக்கு ஒரு மகள் போன்றவள் தானே, கல்வி பயிலும் உரிமை எனக்கு இல்லையா.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

எனவே நான் தற்கொலை செய்துக் கொள்ள போகிறேன் என்று கூறிய லதா விஷத்தை எடுத்து குடித்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைகாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

English summary
A college girl near Bangalore tries for suicide for the Villagers sets her family aside.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X