For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூர் லால்பாக் ஏரியில் மிதந்த 15 வயது மாணவியின் உடல்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூரு லால்பாக் ஏரியில் பள்ளிச் சீருடையில் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள லால்பாக் ஏரியில் நேற்று காலை மிகப் பெரிய பொருள் ஒன்று மிதப்பதாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது. காலை சுமார் 6.30 மணி அளவில் அப்பகுதியில் வாக்கிக் சென்ற மக்கள், முதலில் யாரோ மிகப் பெரிய பையில் குப்பையைக் கொண்டு வந்து கொட்டியிருக்க வேண்டும் என தவறுதலாக நினைத்தார்கள்.

Girl’s floating body shocks Lalbagh walkers at sunrise

பின்னர் கூர்ந்து பார்த்தபோது தான் அது பிளாஸ்டிக் கவர் அல்ல, பெண்ணின் சடலம் என்பது தெரிய வந்தது. அதுவும் பள்ளிச் சீருடையில் இருந்த மாணவியின் உடல் அது என்பது தெரிந்து பெரிதும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

உடனடியாக இது தொடர்பாக போலீசாருக்கு அவர்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

English summary
The body of a 15-year-old girl was found by walkers at the Lalbagh lake. The police have identified the victim as Kavya, a resident of Bosco’s Rainbow Home in Chamarajpet. She was a tenth standard student of a Hombegowda Nagar school in the city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X