For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதி கோயிலில் உண்டியல் பணம் எண்ணலாம்.. ப. சிதம்பரம் கிண்டல்

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கோவில் பணம் எண்ண ஏன் செல்ல கூடாது ? - ப.சிதம்பரம்

    டெல்லி: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஏன் திருப்பதி கோயிலில் உண்டியல் பணம் எண்ண செல்லக்கூடாது என்று ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி இருக்கிறார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்ட பணம் எண்ணப்பட்டு வருவதாக கூறியதற்கு ப. சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.

    சென்ற வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இதன் காரணமாக அப்போது வழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

    இப்போது வரை கோடிக்கணக்கில் பழைய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வரவில்லை. 2 சதவிகித நோட்டுகள் இன்னும் ரிசர்வ் வங்கியிடம் வரவில்லை என்று கூறப்படுகிறது.

    திருப்பதி

    திருப்பதி

    தற்போது திருப்பதி தேவஸ்தானத்திடம் 25-30 கோடி வரை பழைய ரூபாய் நோட்டுக்கள் இருக்கிறது. இதில் 1000 ரூபாய் நோட்டுகள் அதிகம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தற்போது இதை முழுமையாக கணக்கு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. எவ்வளவு பணம் முழுமையாக இருக்கிறது என்று சில நாட்களுக்குள் தெரியவரும்.

    இன்னும் எண்ணுகிறார்கள்

    இன்னும் எண்ணுகிறார்கள்

    பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரும்படி தற்போது திருப்பதி தேவஸ்தானம் ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு பதிலளித்த ஆர்.பி.ஐ, இன்னும் பழையாய் ரூபாய் நோட்டுக்களை எண்ணிக் கொண்டு இருக்கிறோம் என்று கூறியுள்ளது. விரைவில் திருப்பதி தேவஸ்தான பணம் வாங்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

    நீங்களே எண்ணலாம்

    நீங்களே எண்ணலாம்

    இந்த நிலையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஏன் திருப்பதி கோயிலில் உண்டியல் பணம் எண்ண செல்லக்கூடாது என்று ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் ஆர்.பி.ஐ. அதிகாரிகளை விட திருப்பதி கோயில் ஊழியர்கள் வேகமாக பணம் எண்ணுவதாக கூறியுள்ளார்.

    பாஜக மோசம்

    பாஜக மோசம்

    மேலும் ''14 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது மன்மோகன் சிங்கின் மிகப்பெரிய சாதனை. அதே மக்களை மக்களை வறுமையில் தள்ளியதுதான் பாஜக அரசு செய்த சாதனை. இதை பணமதிப்பிழப்பு மூலம் எளிதாக நடத்தி இருக்கிறது பாஜக அரசு'' என்றுள்ளார்.

    English summary
    Launching a scathing attack on the BJP-led government over the handling of the India economy, former finance minister P Chidambaram on Sunday said the number of people below poverty line went up during the NDA rule. He also took potshots at the RBI over demonetisation and the time the top bank took to count the currency notes that returned to the system post note ban.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X