For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்… அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

Google Oneindia Tamil News

Recommended Video

    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்

    பானர்ஜி: கோவா முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 63.

    கணைய புற்றுநோய் காரணமாக மும்பை, டெல்லி நகரங்களில் சிகிச்சை பெற்று வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று நாடு திரும்பினார்.

    சில வாரங்கள் ஓய்வுக்குப் பிறகு, அரசுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். மனோகர் பாரிக்கருக்கு பதிலாக தங்களை ஆட்சி அமைக்க அழைக்க கோரி, காங்கிரஸ் கட்சியினர் ஆளுநரை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதற்கு பாஜக தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

    குடியரசுத் தலைவர் அறிவிப்பு

    இந்நிலையில், அரசுப் பணிகளில் மெல்ல ஈடுபட்ட வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல் நிலை கடந்த சில நாட்களாக மிகவும் மோசமானது. இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமாகி விட்டதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். பொதுவாழ்க்கையில் மனோகர் பாரிக்கரின் சேவையை நாட்டு மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள் என்று கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி புகழாரம்

    முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர் மரணமடைந்ததை அறிந்த பாஜக முக்கிய தலைவர்கள் கோவா விரைந்துள்ளனர். கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் சேவையை வருங்கால சந்ததியினர் நினைவு கூறுவார்கள் என்றும் மனோகர் பாரிக்கரின் மறைவு மிகுந்த வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ள பிரதமர் மோடி மனோகர் பாரிக்கரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்

    அமித்ஷா இரங்கல்

    அமித்ஷா இரங்கல்

    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். மனோகர் பாரிக்கரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு கடவுள் வலிமையை கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    வருத்தமளிக்கிறது

    தனது நோயை எதிர்த்து ஒரு ஆண்டுக்கும் மேலாக போராடிய கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவு வருத்தமளிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

    திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கல்

    திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கல்

    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    பெரிய இழப்பு

    பெரிய இழப்பு

    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவு தேசத்திற்கு மட்டும் அல்ல, தமக்கும் பெரிய இழப்பு என்று ம.நீ.ம. தலைவர் கமல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    கட்சித் தலைவர்கள் இரங்கல்

    கட்சித் தலைவர்கள் இரங்கல்

    மேலும், மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ராமதாஸ் உள்ளிட்டோரும் இரங்கல்தெரிவித்துள்ளனர் .

    இரங்கல் கூட்டம்

    இரங்கல் கூட்டம்

    முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சரும், கோவா முதலமைச்சருமான மனோகர் பாரிக்கர் மறைவைத் தொடர்ந்து நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளது.

    English summary
    Condolence meet to be held in the Union Cabinet at 11 am tomorrow for Goa Chief Minister Manohar Parrikar
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X