For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவா முதல்வர்... பிரமோத் சாவந்த்... கொரோனா தொற்று உறுதி!!

Google Oneindia Tamil News

பனாஜி: கோவா முதல்வர் பிரமோத் சாவந்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனக்குத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

கோவா முதல்வர் பிரமோத் சாவந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தபோதும், அறிகுறி இல்லாத தொற்று அவருக்கு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருந்தாலும் 47 வயதாகும் சாவந்த் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Goa CM Pramod Sawant Tests Positive for coronavirus

தனிமைப்படுத்திக் கொண்டாலும் தனது அரசு வேலைகளை அவரே மேற்கொள்வார் என்று பதிவிட்டுள்ளார். மேலும், தன்னை தொடர்பு கொண்டவர்கள் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளான முதல்வர்களில் நான்காவது முதல்வராக சாவந்த் இருக்கிறார். இவருக்கு முன்பாக மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கர்நாடகா முதல்வர் பிஎஸ் எடியூரப்பா, அரியானா முதல்வர் எம்எல் கட்டார் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இவர்கள் அனைவரும் தொற்றில் இருந்து மீண்டு, தங்களது வழக்கமான பணிகளை கவனித்து வருகின்றனர்.

அடிக்கடி உருமாறும் கொரோனா வைரஸ்.. புரோட்டீன் மியூட்டேஷனால் குழப்பம்.. வாக்சின் வருவது தாமதமாகும்! அடிக்கடி உருமாறும் கொரோனா வைரஸ்.. புரோட்டீன் மியூட்டேஷனால் குழப்பம்.. வாக்சின் வருவது தாமதமாகும்!

கோவாவில் 3,962 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 13,850 பேர் இந்த தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளனர். 194 பேர் உயிரிழந்துள்ளனர்.

English summary
Goa CM Pramod Sawant Tests Positive for coronavirus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X