For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்தினால் தண்டனை – கோவா கலெக்டர் அதிரடி தடை உத்தரவு!

Google Oneindia Tamil News

Goa government bans sale of plastic flags
பனாஜி: சுதந்திர இந்தியாவின் 68 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் போது பிளாஸ்டிக் கொடிகளை பயன்படு்த்த கோவா மாநில அரசு தடை விதித்துள்ளது.

இது குறித்து வடக்கு கோவா மாவட்ட கலெக்டர் , "வரும் 15 ஆம் தேதி நாட்டின் 68 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. அப்போது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிளாஸ்டிக்கால் தயாரி்க்கப்பட்ட கொடிகளை பயன்படுத்த கூடாது .

அதே நேரத்தில் பிளாஸ்டிக் கொடிகளை, தயாரிப்பவர்களும் விற்பனை செய்பவர்களும் தண்டனைக்குள்ளாவார் கள். மேலும் பேப்பர் கொடிகளை பயன்படுத்துவதற்கு எவ்வித தடையும் கிடையாது" என தெரிவித்துள்ளார்.

இதனை மீறினால் தேசிய கொடியை அவமதித்தல், சின்னங்களை அவமதித்தல் சட்டமான 1950 ஆம் ஆண்டின் இந்திய இறையாண்மையைக் களங்கமாக்கிய சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலமாக பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்து, அந்நாளில் இருந்து பிளாஸ்டிக் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

English summary
The Goa government has banned the sale of plastic national flag during the Independence Day celebration.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X