For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ஆபரேஷன் கோவா' சக்சஸ்... கட்சி தாவிய காங்., எம்.எல்.ஏ.க்களில் 3 பேருக்கு அமைச்சர் பதவி

Google Oneindia Tamil News

பானர்ஜி: காங்கிரசில் இருந்து, பாஜகவுக்கு தாவிய பத்து எம்.எல்.ஏக்களில் மூன்று பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றனர்.

பிலிப் நேரி ரோட்ரிக்ஸ், ஜெனிபர் மொன்செரட் மற்றும் சந்திரகாந்த் கவ்லேகா ஆகியோர் கோவா அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்றனர். முன்னாள் துணை சபாநாயகர் மைக்கேல் லோபோவும் பதவியேற்றுக் கொண்டார்.

Goa: Ministerial post to be given to the Congress MLAs

கோவா மாநிலத்தில் மனோகர் பாரிக்கர் மறைந்ததை அடுத்து புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார். காங்கிரசை விட குறைந்த எம்.எல்.ஏ.க்களை கொண்ட பாஜக சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உதவியுடன் ஆட்சியில் இருந்து வந்தது. இந்த நிலையில், 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியிலிருந்து விலகி அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.வில் இணைந்தனர். இதையடுத்து கோவா அமைச்சரவை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில், புதிய அமைச்சர்களை சேர்ப்பதற்கு வசதியாக, ஏற்கனவே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 4 பேரை இன்று நீக்கி முதல்வர் பிரமோத் சாவந்த் உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி, துணை முதல்வர் விஜய் சர்தேசாய், நீர்வளத்துறை அமைச்சர் வினோத் பால்யேகர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயேஷ் சல்கோங்கர் (இவர்கள் மூவரும் கோவா பார்வர்டு கட்சியைச் சேர்ந்தவர்கள்), வருவாய்த்துறை அமைச்சர் ரோகன் கான்டே (சுயேட்சை) ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவர்களுக்குப் பதிலாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவிய, 10 எம்எல்ஏக்களில் 3 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

English summary
Source: Ministerial post to be given to the Congress MLAs In Goa
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X