For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”ஹலோ...இந்த பிளைட்டில் பாம் இருக்கு” - வெடிகுண்டு புரளியால் தரையிறக்கப்பட்ட மும்பை விமானம்!

Google Oneindia Tamil News

நாக்பூர்: புவனேஸ்வரில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்ட கோ ஏர் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளம்பியதை அடுத்து அவ்விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து மும்பை நோக்கி கோ ஏர் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 150 பயணிகள் இருந்தனர். அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கோ ஏர் விமான நிறுவன மேலாளருக்கு மர்ம டெலிபோன் ஒன்று வந்தது.

GoAir Bhubaneswar-Mumbai flight diverted after bomb scare

இதுகுறித்து அந்த விமானத்துக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அந்த விமானம் இன்று அதிகாலை நாக்பூரில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அதில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி விட்டு அதிகாரிகளும், போலீசாரும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அந்த விமானத்தில் சந்தேகப்படியான பொருள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் இது புரளி என்று தெரிய வந்தது. இதனால் அனைவரும் நிம்மதி அடைந்தனர். இந்த வெடிகுண்டு புரளியில் விமான பயணிகள் பெரிதும் பீதி அடைந்தனர்.

இந்தியாவில் குடியரசு தினத்தை யொட்டி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இதனால் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்த விமான வெடிகுண்டு மிரட்டல் மேலும் பீதியை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

English summary
A GoAir Bhubaneswar-Mumbai flight was diverted to and landed in Nagpur after a bomb scare.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X