For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடர்ந்து மைனஸில் செல்லும் வெப்பநிலை.. பகலிலும் பனிப்பொழிவு.. காஷ்மீர் எப்படி இருக்கு தெரியுமா?

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக மிக கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது.

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக மிக கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது.

உலகம் முழுக்க பல நாடுகளில் தற்போது பனிப்பொழிவு அதிகம் ஆகியுள்ளது. அமெரிக்காவில் பல இடங்கள் பனிபொழிவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

சென்னையிலும் கூட கடந்த வாரம் மிக குறைவான வெப்பநிலை நிலவியது. இந்த நிலையில் எப்போதும் குளிராக இருக்கும் ஜம்மு காஷ்மீரில் வெப்பநிலை மேலும் குறைந்து பனி அதிக அளவில் பொழிந்து வருகிறது.

தொடர்ந்து குறைகிறது

காஷ்மீரில் இரவில் வெப்பநிலை தொடர்ந்து குறைந்து கொண்டே செல்கிறது. கடந்த ஒரு வாரமாக அங்கு வெப்பநிலை யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு குறைந்து இருக்கிறது. அதேபோல் கடந்த ஒரு வாரமாக அங்கு பகலிலும் கூட வெப்பநிலை மைனஸ் டிகிரி செல்ஸியஸை விட்டு அதிகம் ஆகவே இல்லை என்று கூறுகிறார்கள்.

எவ்வளவு

பகல் பொழுதில் மைனஸ் 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை நிலவுகிறது. அதே சமயம் இரவில் மிகவும் குறைவாக மைனஸ் 13 முதல் மைனஸ் 15 டிகிரி வரை வெப்பநிலை குறைகிறது. சில சமயம் மைனஸ் 17 டிகிரி செல்ஸியஸ் குறைந்துள்ளது. வரும் நாட்களில் இன்னும் வெப்பநிலை குறையும் என்று கூறுகிறார்கள்.

பெரிய வைரல்

இந்த பனிப்பொழிவு குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. முக்கியமாக காஷ்மீரில் பகலில் கூட பனி பொழிந்து வருகிறது. இது தற்போது வீடியோவாக வெளியாகி வைரலாகி இருக்கிறது.

மக்கள் வருகிறார்கள்

இதனால் தற்போது காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் ஆகியுள்ளது. அதே சமயம் அங்கு பனிப்பொழிவு காரணமாக சில சாலைகள் மூடப்பட்டுள்ளது. நேற்று காஷ்மீரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Goes Beyond Minus: Snowfall continues in Jammu and Kashmir's Srinagar and many other places.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X