For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோல்,டீசலுக்கு டெபிட், கிரெடிட் கார்டில் பணம் செலுத்தினால் 0.75% டிஸ்கவுண்ட்.. இன்று முதல் அமல்

பெட்ரோல்,டீசலுக்கு டெபிட், கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 0.75 சதவீதம் டிஸ்கவுண்ட் கிடைக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசலுக்கு டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தினால் இன்று முதல் 0.75 சதவீதம் தள்ளுபடி என்ற அறிவிப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

ரொக்கப் பணமாக இன்றி, டிஜிட்டல் முறையில் (டெபிட்-கிரெடிட் கார்டுகள், ஆன்லைன், இ-வாலட் மூலமான பரிவர்த்தனை) பணம் செலுத்தும் பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதன்படி, பெட்ரோல், டீசல் ஆகியவற்றை கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் நிரப்பிக் கொள்பவர்களுக்கு 0.75 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

 GoI announces 0.75% discount on use of Debit/Credit Cards

இந்நிலையில், மத்திய அரசின் இந்த திட்டம் நேற்று நள்ளிரவு முதல் மத்திய அரசால் இயக்கப்படும் பெட்ரோலிய நிலையங்களில் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 49 காசுகளும், டீசலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 41 காசுகளும் தள்ளுபடி கிடைக்கும்.

இது கேஷ் பேக் அடிப்படையில், 3 நாட்களுக்குள் வாடிக்கையாளரின் கணக்கில் சேர்க்கப்படும் என்றும், அடுத்த முறை பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பிக் கொள்ளும்போது, அது கழிக்கப்படும் என்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் முறை என்பது டெபிட், கிரெடிட் கார்டுகள், இ-வாலெட் மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்தப்படும் பணத்தை குறிப்பிடுகிறது.

English summary
GoI announces 0.75% discount on use of Debit/Credit Cards, Mobile Wallets and Prepaid Loyalty Cards at PSU petrol pumps from December 13th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X