"இதுக்கு" கூடவா?.. தினமும் மந்திரம் ஓதி.. பூஜை செய்து.. தெறிக்க விடும் உபி சாமியார்.. என்ன தெரியுமா?
கான்பூர்: ஒருத்தர் தங்கத்திலேயே மாஸ்க் வாங்கி மாட்டி கொண்டுள்ளார்.. அந்த மாஸ்க் 5 லட்சம் ரூபாயாம்.. அதுவும் இவர் ஒரு சாமியாராம்.. உபியை சேர்ந்தவர்..!
கொரோனாவைரஸ் தொற்றில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ள எந்த மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.. இதற்கான ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இப்போதைக்கு நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசிதான்.. கொரோனா வைரஸ் பரவிலில் இருந்து தற்காத்து கொள்ள, எல்லாருமே மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

தண்டனை
இந்த மாஸ்க் போடாதவர்கள் யார் என்று கண்காணித்து அவர்களுக்கு நூதன தண்டனைகளும் அபராதங்களும் ஆங்காங்கே விதிக்கப்பட்டும் வருகிறது.. நமக்காவது பரவாயில்லை, மாஸ்க் போடாவிட்டால் ஃபைன் அல்லது திருக்குறளை ஒப்பிக்கணும்.. இதுவே வடமாநிலங்களில், மாஸ்க் போடாதவர்களை, நடுரோட்டிலேயே ஈவிரக்கமின்றி அடித்து துவம்சம் செய்துவிடுவார்கள் அந்த ஊர் காக்கிகள்.

சாமியார்
இப்படிப்பட்டு சூழலில்தான், ஒரு சாமியார் மாஸ்க் அணிந்துள்ளார்.. இவர் பெயர் மனோஜ் செங்கர்.. கான்பூரை சேர்ந்தவர்.. 5 லட்சம் ரூபாய்க்கு தங்கத்திலேயே மாஸ்க் செய்து அணிந்துள்ளார்.. இவரை "தங்க பாபா" என்று இந்த ஊர் மக்கள் செல்லமாக கூப்பிடுகிறார்களாம். இந்த மாஸ்க்குக்கு "ஷிவ் ஸ்வர்ன் ரஷக் கொரோனா மாஸ்க்" என்று இந்த சாமியாரே ஒரு பெயரையும் வைத்துள்ளார்.

தங்க மாஸ்க்
இதைவிட ஹைலைட் என்னவென்றால், இந்த மாஸ்க்கை தினமும் அணிவதற்கு முன்பு, அதற்கு பூஜை செய்கிறாராம்.. மந்திரம் ஓதுகிறாராம்.. அதற்கு பிறகுதான் எடுத்து அணிந்து கொள்கிறாராம்.. இந்த மாஸ்க் பற்றி பாபா சொல்லும்போது, "மக்கள் யாரும் சரியாக மாஸ்க் அணிவதில்லை... கொரோனா 2-வது அலை ரொம்ப மோசமானது.. இந்த தங்க மாஸ்க் 3 அடுக்குகளை கொண்டது.

நகைகள்
3 வருஷத்துக்கு பயன்படுத்த முடியும்.. இந்த தங்க மாஸ்க் அணிந்து கொண்டு இருப்பதால் கொரோனா என் பக்கத்தில் கூட வராது" என்று உறுதியாக சொல்கிறார்.. இவரை பற்றி இன்னொரு கொசுறு தகவலும் உண்டு.. எப்பவுமே தன்னுடைய கழுத்தில் 2 கிலோ நகைகளை அணிந்திருப்பாராம் இந்த "தங்க மகன்" ஸாரி.. சாமியார்..!