For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தயவு செய்து இதை நாய்னு இனிமேல் சொல்லாதீங்க.. ரத்ததானம் செய்த கடவுள்.. கத்துக்குவோம் நாமளும்!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட ஆண் நாய்க்கு பெண் லேப்ரடார் நாய் ஒன்று ரத்தம் தானம் செய்துள்ளது. நாய்கள் ரத்த தானம் செய்வது என்பது நடைமுறையில் இல்லாத ஒரு விஷயம் என்பதால் இந்த சம்பவம் வைரலாகி வருகிறது.

தானத்தில் சிறந்தது அன்னதானம் என கூறுவதுண்டு. புராண கதைகளிலும் தானம் என்றால் அதற்கு கர்ணனை கூறுகிறோம். அந்தளவுக்கு தானம் செய்வதில் சிறந்து விளங்கியவன் கர்ணன். யார் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாதவன்.

மகாபாரத போரில் மடிந்த கர்ணன் நேராக சொர்க்கத்துக்கு செல்கிறான், அங்கு அவனுக்கு பசி வாட்டுகிறது. சொர்க்கத்தில் பசிக்காது என்று சொல்வார்களே நமக்கு மட்டும் ஏன் பசிக்கிறது என கர்ணன் சிந்தித்து நாரதரிடம் கேட்கிறான்.

குழந்தைகள், பெண்களை சீரழிக்கும் கொடியவர்களை தப்பவிடக்கூடாது -அன்புமணிகுழந்தைகள், பெண்களை சீரழிக்கும் கொடியவர்களை தப்பவிடக்கூடாது -அன்புமணி

தானம்

தானம்

அதற்கு நாரதரும் உன் ஆள்காட்டி விரலை வாயில் வை என்கிறார். அப்போது கர்ணன் தனது ஆள்காட்டி விரலை வாயில் வைத்தால் பசி போகிறது. விரலை எடுத்தால் பசி எடுக்கிறது. இதற்கு காரணம் புரியாமல் மீண்டும் நாரதரிடம் கேட்டபோது அதற்கு அவர் கர்ணா நீ எல்லா தானங்களையும் செய்தாய், இல்லை என யார் எது கேட்டாலும் கொடுத்தாய்.

ஆள்காட்டி விரல்

ஆள்காட்டி விரல்

ஆனால் நீ உன் வாழ்வில் ஒரு முறை கூட அன்னதானம் செய்ததில்லை. ஆனால் ஒரு முறை வழிபோக்கன் ஒருவன் அன்னசத்திரம் எங்கிருக்கிறது என கேட்ட போது நீ உன் ஆள்காட்டி விரலை நீட்டி காட்டினாய். அதனால் அந்த வழிபோக்கனின் பசி அடங்கியது என்றார். அப்போதுதான் அன்னதானத்திற்கு வெறும் கையைதானே காட்டினோம் அதற்கே இத்தனை புண்ணியமா, என கேட்டதோடு அன்னதானத்தின் உன்னதத்தை கர்ணன் உணர்ந்தான்.

கர்ணன்

கர்ணன்

இந்த நவீன யுகத்தில் கர்ணன் காட்டிய வழியை பின்பற்றி உணவு தானத்தை செய்கிறோம். ஆனால் ரத்த தானம் என்பதை ஒரு சிலர்தான் செய்கிறார்கள். ரத்ததானத்தை நிறைய பேர் செய்யாததால் குறிப்பிட்ட பிரிவு ரத்தம் கிடைக்காமல் எத்தனையோ உயிர்கள் இறக்க நேரிடுகிறது. இதனால் தானத்தில் சிறந்தது ரத்ததானம் என சொல்கிறார்கள்.

ஸ்பிட்ஸ் டேனி

ஸ்பிட்ஸ் டேனி

தற்போது பெரும்பாலானோர் ரத்த தானம் செய்கிறார்கள். சரி மனிதர்கள் செய்ய கேட்டிருக்கிறோம். ஆனால் கொல்கத்தாவில் ஒரு நாய் ஒன்று ரத்ததானம் செய்துள்ள சம்பவம் வைரலாகி வருகிறது. நடிகர் அனிந்தியா சாட்டர்ஜியின் 13 வயது லேப்ரடார் சியா, அதே வயதுடைய ஸ்பிட்ஸ் டேனி என்ற நாய்க்கு ரத்தத்தை தானம் செய்துள்ளது.

மருத்துவமனையில் டேனி

மருத்துவமனையில் டேனி

சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த டேனி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அப்போது அந்த நாய்க்கு ரத்தம் தேவைப்பட்டது. இதுகுறித்து கொல்கத்தாவில் உள்ள கால்நடை மருத்துவர் டாக்டர் தேபஜித் ராய் கூறுகையில் டேனிக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அதனால் அதற்கு ரத்தம் தேவைப்பட்டது. இது போன்ற சிகிச்சை கொல்கத்தாவில் மிகவும் புதிது என்பதால் ரத்தம் கிடைக்காமல் அவதிப்பட்டோம்.

பெருமிதம்

பெருமிதம்

நாய்கள் ரத்த தானம் செய்து இதுவரை நடைமுறையில் இல்லை. பின்னர் டேனிக்கு சியா ரத்தத்தை தானமாக கொடுக்க முன்வந்ததை அடுத்து நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம் என்றார். இதுகுறித்து சியாவின் உரிமையாளர் அனிந்த்யா சாட்டர்ஜி கூறுகையில் டேனிக்கு சியா ரத்ததானம் கொடுத்ததில் மிகவும் பெருமையடைகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

English summary
A labrador dog in Kolkatta donates blood to save another Dog's life and emerged as a Hero.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X